அமெரிக்க அதிபராகிறார் ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்று உள்ளார்.
அமெரிக்க அதிபராகிறார் ஜோ பைடன்
x
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்று உள்ளார். பெரும்பான்மைக்கு 270 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், 290 இடங்களைக் கைப்பற்றி பைடன் பெரும்பான்மை பெற்று உள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்த நிலையில், முடிவுகளை அறிவிப்பதில் 3 நாட்களுக்கும் மேலாக இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில், பென்சில்வேனியா, நெவேடா ஆகிய மாகாணங்களை பைடன் கைப்பற்றியதை தொடர்ந்து அவரது வெற்றி உறுதியாகி உள்ளது. பைடனை எதிர்த்து போட்டியிட்ட தற்போதைய அதிபர் டிரம்புக்கு 214 இடங்களே கிடைத்து உள்ளது.





Next Story

மேலும் செய்திகள்