அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கோபம் - தேர்தல் முடிவுகளை தொலைக்காட்சிகளில் பார்த்து ஆத்திரம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் தபால் வாக்குகளை எண்ண எண்ண முடிவு ஜோ பைடனுக்கு சாதகமாக செல்கிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கோபம் - தேர்தல் முடிவுகளை தொலைக்காட்சிகளில் பார்த்து ஆத்திரம்
x
அமெரிக்க அதிபர் தேர்தலில் தபால் வாக்குகளை எண்ண எண்ண முடிவு ஜோ பைடனுக்கு சாதகமாக செல்கிறது. இதனால் கடும் கோபம் மற்றும் அதிருப்திக்கு உள்ளாகியிருக்கும் அடிபர் டிரம்ப்  நீண்ட நேரத்தை தொலைக்காட்சியிலே செலவிடுகிறார். தேர்தல் முடிவுகளால் ஆத்திரம் அடைந்துள்ள அவர், நெருங்கியவர்களிடம் தொலைபேசியில் சட்டப் போராட்டத்திற்கான தகவல்களை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. 

அமெரிக்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை - ஜார்ஜியாவில் பைடனைவிட பின் தங்கிய டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஜார்ஜியா மாகாணத்தில் ஜோ பைடனிடம் அதிபர் டொனால்டு டிரம்ப் பின்தங்கி உள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது.  இதற்கிடையே 8 ஆயிரத்து  890 ராணுவ வீரர்களின் தபால் வாக்குகள் எண்ணிக்கை மையத்திற்கு வர வேண்டியது உள்ளது. அவ்வாறு வரும் பட்சத்தில் அதிபர் டிரம்புக்கு குறிப்பிடத்தக்க வாக்குகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை எதிர்த்து வழக்கு

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை எதிர்த்து வழக்கு தொடர்வதற்கு குடியரசுக் கட்சி 60 மில்லியன் டாலர் நிதி திரட்ட முடிவெடுத்து உள்ளது. வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அதை எதிர்த்து வழக்கு தொடரப் போவதாகவும் அதிபர் டிரம்ப் கூறியிருந்த நிலையில், பென்சில்வேனியா, ஜார்ஜியா ஆகிய மாகாணங்களில் குடியரசுக் கட்சி வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில், இன்னும் பல மாகாணங்களில் வழக்கு தொடர்வதற்காக கொடையாளர்கள், கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்டவர்களிடம் இருந்து நிதி திரட்டப்போவதாக குடியரசுக் கட்சி கூறி உள்ளது.

"தவறான வழியில் பைடன் பதவிக்கு உரிமைகோர கூடாது" - அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து

அமெரிக்க அதிபர் பதவிக்கு தவறான வழியில் ஜோ பைடன் உரிமை கோரக் கூடாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், தன்னாலும் தவறான வழியில் உரிமை கோர முடியும் என்று குறிப்பிட்டு உள்ளார். மேலும் தேர்தல் முன்னிலை நிலவரம் நீதிமன்றம் செல்வதால் மாற்றம் அடையும் என்றும் டிரம்ப் கூறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்