அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில் இழுபறி : டிரம்ப்-பைடன் இடையே கடும் போட்டி

அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் 3 நாட்களைக் கடந்தும் முடிவுகளை அறிவிப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில் இழுபறி : டிரம்ப்-பைடன் இடையே கடும் போட்டி
x
அமெரிக்க அதிபர் பதவிக்கு கடந்த 3-ஆம் தேதி தேர்தல் நடந்தது. இதில் ஆளும் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனும் போட்டியிட்டனர். தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வரும் நிலையில், முடிவுகளில் இழுபறி நீடிக்கிறது. தற்போதைய நிலவரப்படி பைடன் 264 இடங்களிலும், டிரம்ப் 214 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர். பெரும்பான்மையை அடைவதற்கு 270 இடங்கள் தேவைப்படும் நிலையில், வெற்றியைத் தீர்மானிக்க உள்ள பென்சில்வேனியா, ஜார்ஜியா ஆகிய மாகாணங்களில் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. பென்சில்வேனியாவில் சுமார் 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், ஜார்ஜியாவில் சுமார் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் ஜோ பைடன் முன்னிலையில் உள்ளார். இந்த 2 மாகாணங்களில் ஒன்றை வெல்லும்பட்சத்தில் பைடன் வெற்றி பெற்றுவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்