ஆஸ்திரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் - இருவர் உயிரிழப்பு, 15-க்கும் அதிகமானோர் காயம்

ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த நகரமும் பாதுகாப்பு படையின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆஸ்திரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் - இருவர் உயிரிழப்பு, 15-க்கும் அதிகமானோர் காயம்
x
வியன்னாவில் பிரபல வழிபாட்டு தளத்தை குறிவைத்து ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக தகவல் அறிந்துவந்த பாதுகாப்பு படையினர் ஆயுததாரிகளுக்கு பதிலடியை கொடுத்தனர். இதற்கிடையே பொதுமக்கள் வெளியே வரவேண்டாம், வீட்டுக்குள்ளே பத்திரமாக இருங்கள் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது. நகரத்தில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அந்நாட்டு உள்துறை அமைச்சகம் பயங்கரவாத தாக்குதல்தான் என உறுதி செய்ததுடன், ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான் என்றும் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவித்து இருக்கிறது. 15-க்கும் அதிகமானோர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதற்கிடையே துப்பாக்கி சூடு தாக்குதலில் உயிரிழப்பு அதிகமாக இருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

வியன்னா தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்

ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயம் அடைந்து உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, தாக்குதல் சம்பவம் குறித்து அறிந்த போது அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததாக பதிவிட்டுள்ளார். இந்த நெருக்கடியான தரூணத்தில் ஆஸ்திரியா உடன் இந்தியா உள்ளதாகவும், உயிரிழந்தவர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினருக்கு அனுதாபங்களையும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்