டிரம்ப் பிரசார கூட்டத்தினால் கொரோனா பரவல் - 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று
பதிவு : நவம்பர் 01, 2020, 01:53 PM
அமெரிக்காவில் டிரம்பின் பிரசார கூட்டத்தினால் 700 பேருக்கு மேல் கொரோனாவினால் உயிரிழந்திருக்கலாம் என்ற அதிர்ச்சி ஆய்வு முடிவு வெளியாகியிருக்கிறது.
அமெரிக்காவில் தொற்று பரவல் தொடர்பாக ஆய்வினை மேற்கொண்டு ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அதிபர் டிரம்பின் 18 தேர்தல் கூட்டத்தினால் கூடுதலாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 700க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் பெரும் விலையை கொடுத்துள்ளனர் எனவும் ஆய்வாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே டிரம்ப் கூட்டம் நடைபெறும் இடங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதால், நிலைமை மேலும் மோசமாகலாம் என அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது வெளியாகியிருக்கும் ஆய்வு முடிவை குறிப்பிட்டு, எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோ பைடன் டிரம்பை விமர்சனம் செய்துள்ளார். மக்களைப்பற்றி கவலைப்படாத டிரம்ப், தன்னுடைய ஆதரவாளர்கள் பற்றியும் கவலைப்படவில்லை என டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்

நிவர் புயல் காரணமாக, நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

263 views

தனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி

தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

218 views

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

163 views

பிற செய்திகள்

கால்பந்து ஜாம்பவான் மாரடோனா உடல் அடக்கம் - பெற்றோர்களின் சமாதிக்கு அருகில் அடக்கம்

பிரபல கால்பந்து ஜாம்பவான் டீகோ மாரடோனாவின் உடல் அர்ஜென்டினாவில் அடக்கம் செய்யப்பட்டது.

147 views

இந்தியாவுடன் இணைந்து தடுப்பூசி உற்பத்தி - ரஷ்யா அறிவிப்பு

இந்தியாவுடன் இணைந்து அடுத்த வருட தொடக்கத்தில் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்யப்படும் என ரஷ்யா தெரிவித்து உள்ளது.

136 views

பயங்கரவாதி சஜித் மீர் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ. 37 கோடி சன்மானம் வழங்கப்படும் என அமெரிக்கா அறிவிப்பு

மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சஜித் மீர் குறித்து தகவல் தெரிவித்தால் 37 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்து உள்ளது.

132 views

100 ஆண்டுகளாக பயிற்சியில் ரஷ்ய பாய் மரக்கப்பல் - ஓராண்டு பயிற்சி பயணத்தை நிறைவு செய்த செடோவ்...

உலகின் பாரம்பரிய பாய்மர பயிற்சிக் கப்பலான ரஷ்யாவின் செடோவ் பாய்மரக் கப்பல் ஓராண்டு பயிற்சியை நிறைவு செய்து ரஷ்யாவின் கலினின்கிராட் வந்து சேர்ந்து உள்ளது.

7 views

தாய்லாந்தில் போராட்டம் நீடிப்பு : "ஆட்சிக் கவிழ்ப்புக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்" - போராட்டக்காரர்கள் வலியுறுத்தல்

தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில், கடந்த சில மாதங்களாக அரசுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர்.

10 views

36 வருடங்களாக துணையின்றி தவித்த யானை - கம்போடியா செல்கிறது காவன் யானை

பாகிஸ்தானில் துணையின்றி 36 வருடங்களாக தவித்து வரும் ஆசிய யானையான காவன் இந்த வார இறுதியில் கம்மோடியாவுக்கு விமானம் மூலம் அழைத்து செல்லப்பட உள்ளது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.