"அதிபர் பதவியை 'ரியாலிட்டி ஷோ' போல நடத்துகிறார்" - டிரம்ப் மீது ஒபாமா கடும் விமர்சனம்

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரசாரங்கள் நேற்று நடந்தன.
அதிபர் பதவியை ரியாலிட்டி ஷோ போல நடத்துகிறார் - டிரம்ப் மீது ஒபாமா கடும் விமர்சனம்
x
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரசாரங்கள் நேற்று நடந்தன. ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடனை ஆதரித்து முன்னாள் அதிபர் ஒபாமா பிரசாரம் செய்தார். மிச்சிகன் மாகாணத்தில் மக்கள் மத்தியில் பேசிய ஒபாமா, அமெரிக்க அதிபர் பதவியை, டிரம்ப், ரியாலிட்டி ஷோ போல நடத்துவதாக விமர்சித்தார். கொரோனா வைரசை மிகவும் மோசமாக டிரம்ப் கையாண்டதாகவும் ஒபாமா குற்றம்சாட்டினார்.

"புதினின் வளர்ப்பு நாய்க்குட்டி டிரம்ப்"  ஜோ பைடன் கடும் தாக்கு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் வளர்ப்பு நாய்க்குட்டி போல அமெரிக்க அதிபர் டிரம்ப் செயல்படுவதாக ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் விமர்சித்து உள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் 3-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மிச்சிகன் மாகாணத்தில் நடந்த இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜோ பைடன் பேசினார். அப்போது அதிபர் பதவியில் இருந்து டிரம்ப் ஒழிந்தால்தான், அமெரிக்காவில் இருந்து கொரோனா ஒழியும் என்றார்.

"நான் அதிபராக இருப்பது உங்களது அதிர்ஷ்டம்" - இறுதிக்கட்ட பிரசாரத்தில் அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் தேர்தல் இறுதிக்கட்ட பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில்,  பென்சில்வேனியா மாகாணத்தில், அதிபர் டிரம்ப் உரையாற்றினார். அப்போது, பேசிய அவர், கொரோனா வைரசை முற்றிலுமாக ஒழித்து, மீண்டும் 7 மாதங்களுக்கு முன்பு இருந்தது போல இயல்பு நிலைக்கு திரும்புவோம் என உறுதியளித்தார். ஜோ பைடன் அதிபரானால், கொரோனா தடுப்பூசியை தாமதப்படுத்துவார் என்றும் அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டினார்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு/

ஸ்பெயின் நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களில் வன்முறை வெடித்தது. முக்கிய நகரங்களில் வீதியில் இறங்கி போராடிய மக்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அங்குள்ள மட்ரிட் நகரில் சாலைகளில் போராட்டம் நடத்தியவர்கள், குப்பைகளை சாலையில் கொட்டி தீ வைத்தனர். வன்முறை சம்பவங்களுக்கு அந்நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்