ரூபாய் நோட்டில் காஷ்மீர் இல்லாத இந்திய வரைபடம் - சவுதி அரேபியாவிடம் எதிர்ப்பை பதிவு செய்தது இந்தியா

சவுதி அரேபியாவின் ரூபாய் நோட்டில் காஷ்மீர், லடாக் இல்லாத இந்திய வரைபடம் அச்சடிக்கப்பட்டதற்கு இந்தியா கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
ரூபாய் நோட்டில் காஷ்மீர் இல்லாத இந்திய வரைபடம் - சவுதி அரேபியாவிடம் எதிர்ப்பை பதிவு செய்தது இந்தியா
x
ரியாத்தில் வரும் நவம்பர் 21, 22 ஆகிய நாட்களில் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. மிகப்பெரிய வல்லரசு நாடுகள் கலந்துக்கொள்ளும் இந்த மாநாட்டையொட்டி, சவுதி அரேபியாவின் செலாவணி ஆணையம் புதிய ரூபாய் நோட்டு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ரூபாய் நோட்டின் ஒருபகுதியில் இடம்பெற்றுள்ள உலக வரைபடத்தில் உறுப்பு நாடுகளின் வரைபடத்திற்கு மட்டும் நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்திய வரைபடத்தில் காஷ்மீரும், லடாக்கும் விடுபட்டுள்ளது.  அதாவது இருபகுதியும் இந்திய எல்லைக்கு வெளியே இருப்பதுபோல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா பேசுகையில், இந்தியா சார்பில் சவுதி அரேபியா அரசிடம் கடும் எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் சவுதி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரும், லடாக்கும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் வலியுறுத்தினார். 


Next Story

மேலும் செய்திகள்