பிரான்சில் அதிகரிக்கும் கொலையால் மக்கள் அச்சம் - தேவாலயத்தில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூர கொலை

பிரான்சில் உள்ள தேவாலயம் ஒன்றில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.
பிரான்சில் அதிகரிக்கும் கொலையால் மக்கள் அச்சம் - தேவாலயத்தில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூர கொலை
x
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் சில நாட்களுக்கு முன்பு பள்ளி ஆசிரியர் ஒருவர் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். நபிகள் நாயகத்தின் கேலி சித்திரத்தை மாணவர்களுக்கு காட்டியதால் அவர் பயங்கரவாதியால் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. பிரான்ஸ் முழுவதும் இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அந்நாட்டின் தெற்கு கடலோர நகரமான நைஸ் நகரில் உள்ள நோட்ரி தேம் தேவாலயத்தில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூரமாக கொல்லப்பட்டு உள்ளனர். அதில் ஒரு பெண்ணின் தலையை துண்டித்து கொடூரமாக கொன்று உள்ளனர். நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தை முக்கிய இடங்களில் காட்சிப்படுத்த பிரான்ஸ் நகரங்கள் திட்டமிட்டிருந்த நிலையில், இந்த கொலை சம்பவம் நடந்து உள்ளது. இதனிடையே, நைஸ் தேவாலய கொலை சம்பவம் பயங்கரவாத தாக்குதல் என்று நைஸ் நகர மேயர்  கிறிஸ்டியன் எஸ்டோரி குற்றம்சாட்டி உள்ளார். பிரான்சில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதால் அந்நாட்டு மக்கள் அச்சத்தில் ஆழ்ந்து உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்