அமெரிக்க அதிபர் தேர்தல் - வாக்குப் பெட்டி மற்றும் படிவங்களில் இடம் பிடித்துள்ளது தமிழ்

நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பெட்டி மற்றும் படிவங்களில் தமிழ் இடம் பிடித்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் - வாக்குப் பெட்டி மற்றும் படிவங்களில் இடம் பிடித்துள்ளது தமிழ்
x
நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பெட்டி மற்றும் படிவங்களில் தமிழ் இடம் பிடித்துள்ளது. இதுதவிர தெலுங்கு, பஞ்சாபி, இந்தி,  நேபாளி உள்ளிட்ட இந்திய மொழிகளும் இடம்பிடித்துள்ளன.

வாக்கு பெட்டிகளில் இந்திய மொழிகள் இடம் பெற்றுள்ளது, அமெரிக்க வாழ் தமிழர்கள் மற்றும் இந்தியர்களை ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

ஆங்கிலம் ஹிந்தி தவிர தெலுகு,தமிழ் உள்ளிட்ட மேலும் 4 மொழிகள் வாக்குப் பெட்டி அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது. அந்த வாக்குப் பெட்டியில் வாக்குச் சீட்டை எங்கு போட வேண்டும் என்பது தமிழில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அதேபோல பரவலாக பல்வேறு மாகாணங்களுக்கு அனுப்பப்பட்ட வாக்கு பெட்டிகளில் தெலுங்கு மொழியும் பிரதானமாக இடம் பெற்றுள்ளது. அமெரிக்காவில் தெலுங்கு மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.


2018ம் ஆண்டு ஆய்வின்படி அமெரிக்காவில் சுமார் 4 லட்சத்து 15,414 பேர் வீட்டில் தமிழ் பேசுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் இந்திய மொழிகளில் தெலுங்கு முதல் இடத்தை பிடித்துள்ளது.

வாக்காளர்கள் வாக்குகளை செலுத்துவதற்கான விண்ணப்பப்படிவம் தமிழ் உள்பட 6 இந்திய மொழிகளில் வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசியலை தீர்மானிக்கும் முக்கிய நபர்களாக இந்தியர்கள் மாறி வருவதும் அவர்களின் வாக்குகளை கவர்வதற்காக பல்வேறு முக்கியத்துவம் அளிக்கப்படுவதும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.




Next Story

மேலும் செய்திகள்