கொரோனா தடுப்பூசி சோதனை மீண்டும் தொடக்கம் - அஸ்ட்ரா ஜெனிக்கா நிறுவனம் தகவல்

அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி சோதனையை மீண்டும் தொடங்கி உள்ளதாக அஸ்ட்ரா ஜெனிக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி சோதனை மீண்டும் தொடக்கம் - அஸ்ட்ரா ஜெனிக்கா நிறுவனம் தகவல்
x
அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி சோதனையை மீண்டும் தொடங்கி உள்ளதாக அஸ்ட்ரா ஜெனிக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 6 ஆம் ​தேதி, இந்த தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கடுமையான நரம்பியல் நோய் மற்றும்  இங்கிலாந்தில் இந்த நிறுவனத்தின் சோதனையில் பங்கேற்றவருக்கு, குறுக்கு வெட்டு மயக்க அழற்சி ஏற்பட்டதாக  தெ​ரியவந்ததை அடுத்து நிறுத்தப்பட்டது. இதனிடையே, ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் சோதனையும் விரைவில் தொடங்கும் என தாம் நம்புவதாக அமெரிக்க சுகாதாரம் மற்றும் மனிதாபிமான பணிகள் துணைத் தலைவர்  பால் மேங்கோ தெரிவித்துள்ளார். கடந்த வாரம் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன சோதனையில் பங்கேற்ற நபருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அந்த நிறுவனம் சோதனையை நிறுத்தியது. தற்போது தன்னாட்சி அதிகாரம் கொண்ட அந்த நிறுவனத்தின் குழு ஒன்று இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும்  நிலையில்,  பால் மேங்கோ கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. அஸ்ட்ராஜெனிக்கா கடந்த மாதமே இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசிலில் தனது சோதனையை மீண்டும் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்