(22.10.2020) இன்றைய உலக செய்திகள்

(22.10.2020) இன்றைய உலக செய்திகள்
(22.10.2020) இன்றைய உலக செய்திகள்
x
2 வாரங்களே உள்ள அமெரிக்க அதிபர் தேர்தல் - தீவிர பிரச்சாரத்தில் டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு 2 வாரங்களே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் களை கட்டியுள்ளது...

பொது வழிப்பாட்டில் முதன்முறையாக முக கவசம் அணிந்த போப்...

உலக கத்தோலிக்க மதத் தலைவரான போப் முதலாம் பிரான்சிஸ், முதன் முறையாக முக கவசம் அணிந்து பொது வழிபாட்டில் பங்கேற்றார். போப்பின் பாதுகாவலர்கள் நான்கு பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், போப் முக கவசம் அணியாதது தொடர்பாக சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது குறிப்பிடத்தக்கது

பாஸ்டன் உயிரியல் பூங்காவின் முதல் கொரில்லா குட்டி - சிசேரியன் மூலம் பிறந்த குட்டி கொரில்லா

அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் உயிரியல் பூங்காவில் முதல் முறையாக கொரில்லா குட்டி பிறந்துள்ளது. 39 வயதான தாய் கொரில்லாவுக்கு திடிரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் சிசேரியன் மூலம் குட்டியை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். தற்போது தாய் கொரில்லா மற்றும் அதன் குட்டி நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும், விரைவில் தாயுடன் குட்டி இணையும் என்றும் பூங்கா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

அயர்லாந்தை தாக்கிய பலத்த காற்று - மழை வெள்ளத்தில் மிதந்த பீர் பேரல்கள்

அயர்லாந்தில், பீர் பேரல்கள் வெள்ளத்தில் மிதந்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அயர்லாந்தில் வீசிய பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ள நீரில் அந்த பகுதியில் இருந்த பீர் பேரல்கள் அடித்து செல்லப்பட்டன. கார்களும் தண்ணீரில் மூழ்கியது. இந்த நிலையில் அங்கு மேலும் மழை நீடிக்கும் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஸ்பெயின் கிராண்ட்பிரி சைக்கிள் பந்தயம்- பிரமோஸ் ரோகிளிக் பட்டம் வென்றார் 

ஸ்பெயின் கிராண்ட்பிரி மலையேற்ற சைக்கிள் பந்தைய தொடரில் பிரபல வீரர் பிரிமோஸ் ரோகிளிக் பட்டம் வென்றார். 173 கிலோ மீட்டர் பந்தைய தூரத்தை கடந்த ஸ்லோவேனியா வீரர் ரோக்ளிக் பட்டம் வென்று சாதனை படைத்தார்.  




Next Story

மேலும் செய்திகள்