"அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தால், அமெரிக்காவை விட்டு வெளியேறுவேன்" - பிரசார கூட்டத்தில் அதிபர் டிரம்ப் பேச்சு

அதிபர் தேர்தலில் ஒருவேளை தோல்வி அடைந்தால் நாட்டை விட்டு வெளியேறி விடுவேன் என, அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தால், அமெரிக்காவை விட்டு வெளியேறுவேன் - பிரசார கூட்டத்தில் அதிபர் டிரம்ப் பேச்சு
x
அதிபர் தேர்தலில் ஒருவேளை தோல்வி அடைந்தால் நாட்டை விட்டு வெளியேறி விடுவேன் என, அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜார்ஜியானி​ மேகான் நகரில் பிரசாரம் மேற்கொண்டார். தமது ஆதரவாளர்களிடையே பேசிய அவர், வரலாற்றிலேயே மிகவும் மோசமான ஒரு வேட்பாளருடன் தோற்று விட்டால் அப்புறம் தனது வாழ்க்கை வீண் என கருதி நாட்டை விட்டு வெளியேறுவேன் என கூறியுள்ளார். தாம் பண வசூல் செய்வதில், சிறப்பாக செயல்படுவதாகவும், ஆனால் தேர்தல் செலவுக்கு அதிக பணத்தை பெறவில்லை என குறிப்பிட்டார். அமெரிக்க அதிபர் வரலாற்றில் அதிபர் தோரணையில் சிறப்பாக நடந்து கொண்டது தாம் தான் என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்