நைட்ரிக் ஆக்சைட் கொரோனாவுக்கு ஆற்றல் கொண்ட மருந்தாக பயன்படுத்த முடியும் - ஸ்வீடன் விஞ்ஞானிகள்

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை சிகிச்சையாக நைட்ரிக் ஆக்சைடை பயன்படுத்த முடியும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நைட்ரிக் ஆக்சைட் கொரோனாவுக்கு ஆற்றல் கொண்ட மருந்தாக  பயன்படுத்த முடியும் - ஸ்வீடன் விஞ்ஞானிகள்
x
கொரோனா தொற்றுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வைரஸ் எதிர்ப்பு மருந்தான ரெம்டிசிவிர் ஹைட்ராக்சி குளோரோகுயின் உள்ளிட்ட மருந்துகள் வழங்கப்படுகின்றன.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குணம் அடைவதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்வதை குறைப்பதற்காக மட்டுமே ரெம்டெசிவிர் மருந்துகள் பயன்படும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் உலக சுகாதார நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ரெம்டெசிவிர் மருந்துகள் நோய் குணமாவதற்கான நாட்களை குறைப்பதிலோ அல்லது இணை நோய்களை குறைப்பதிலும் எந்தவிதமான ஆக்கபூர்வமான பலனையும் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது. மனிதர்களின் உடலில் இயற்கையாகவே உற்பத்தியாகும் நைட்ரிக் ஆக்சைடை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் அதன் பரவல் கட்டுப்படுத்தவும் ஆற்றல் கொண்ட மருந்தாக பயன்படுத்த முடியுமென ஸ்வீடன் நாட்டில் விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.இந்த நைட்ரிக் ஆக்சைட் ரத்த நாளங்களை விரியச் செய்து உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் எனவும் உடலில் அலர்ஜிக்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டது எனவும் இவற்றில் கூடுதலாக வைரஸுக்கு எதிரான எதிர்ப்பு தன்மை இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.இந்த நைட்ரிக் ஆக்சைடு கரோனா வைரஸ் பிரதி செய்கை அடைவதை தடுப்பதிலும் சிறப்பாக செயல்படுகிறது என ஸ்வீடன் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். குரங்குகளின் உடலில் செலுத்தி செய்யப்பட்ட ஆராய்ச்சியில் இந்த முடிவு ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தீவிரமான நிலையில் இருக்கக்கூடிய நோயாளிகளுக்கு நைட்ரிக் ஆக்சைடு வாயுவை சுவாசிக்க கொடுப்பதன் மூலம் நல்ல பலனளிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸால் தீவிரமாக பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் அளவு திடீரென்று குறைந்து மோசமான நிலைக்கு செல்லும் நோயாளிகளுக்கு நைட்ரிக்  ஆக்சைடு வாயுவை சுவாசித்து கொடுப்பதன் மூலம் சிறப்பான குணம் கிடைக்கும் எனவும் விஞ்ஞானிகள் பரிந்துரைத்துள்ளனர்.இந்த புதிய ஆய்வு முடிவுகள் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்