கடந்த செப்டம்பரில் அதிக வெப்ப சூழல் - 1880-க்கு பிறகு நிலவிய அதிமோசமான நிலை

உலகளவில் கடந்த செப்டம்பர் மாதத்தில் அதிகபட்ச வெப்ப சூழல் நிலவி இருப்பதாக அமெரிக்கா வளிமண்டல ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பரில் அதிக வெப்ப சூழல் - 1880-க்கு பிறகு நிலவிய அதிமோசமான நிலை
x
இதற்கு முன் கடந்த 1880-ம் ஆண்டு இதேபோல் அதிகபட்ச வெப்ப சூழல் நிலவியதாகவும் அதன்பின் மீண்டும் தற்போது நிலவி உலக வெப்பமயமாக்கல் குறித்த அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அதிகபட்சமாக செர்பியாவிலும்,  தென் அமெரிக்காவிலும் அதிக வெப்ப சூழல் நிலவி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வெப்ப சூழலை ஒட்டுமொத்த அளவாக பார்த்தால் கடந்த நூற்றாண்டின் சராசரியான புள்ளி 97 டிகிரி செல்சியசாக உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் அச்சமடையும் செய்தியை தெரிவித்துள்ளனர். இந்த சூழல் தற்போதைய ஆண்டின் இறுதி வரை நிலவினால் உலகத்தில் கூடுதலாக 65 சதவீத வெப்ப சூழல் நிலவும் என அபாய எச்சரிக்கையை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா பெருந்தொற்றில் சிக்கி பொருளாதாரத்தை இழந்து உள்ள நாடுகளுக்கு ஆராய்ச்சியாளர்களின் தற்போதைய அறிக்கை பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.  



  


Next Story

மேலும் செய்திகள்