"அமெரிக்க வரலாற்றில் மோசமான வேட்பாளர் ஜோ பைடன்" - ஜோ பைடன் மீது அதிபர் டிரம்ப் சரமாரி குற்றச்சாட்டு

அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் மோசமான அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் என அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்க வரலாற்றில் மோசமான வேட்பாளர் ஜோ பைடன் - ஜோ பைடன் மீது அதிபர் டிரம்ப் சரமாரி குற்றச்சாட்டு
x
அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் மோசமான அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் என, அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், வாக்குசேகரித்த அவர், ஜோ பைடன், அதிபர்  வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டது நம்பமுடியாதது, அருவருப்பானது மற்றும் அவமானகரமானது என குற்றஞ்சாட்டியுள்ளார். ஜோ பைடன் தேர்தலில் வெற்றி பெற்றால், நாட்டை வழி நடத்த மாட்டார் என்றும்,  தீவிர இடதுசாரிகள் தான் நாட்டை இயக்கும் என்றும் அதிபர் டிரம்ப் சரமாரியாக புகார் கூறினார். பின்னர், அதிபர் டிரம்ப் நடனமாடி வாக்கு சேகரித்தது அவரது ஆதரவாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 

"நான் அதிபரானால் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்" ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வாக்குறுதி

தாம் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டால், அனைத்து துறைகளிலும் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என, ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் உறுதியளித்துள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில், காணொலி மூலம், அமெரிக்க இஸ்லாமிய வழக்கறிஞர்களுடன், உரையாடிய அவர், தாம் அதிபராக பதவியேற்ற முதல் நாளில், இஸ்லாமிய நாடுகளுக்கான பயணத்தடை  முழுவதுமாக நீக்கப்படும் என, வலியுறுத்தினார். மேலும் அனைவரும் ஒன்றிணைந்து, குற்றவியல் சட்டங்களை, பழிவாங்கும் விதமாக அல்லாமல் மீட்பு மையமாக மாற்றுவோம் என ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்தார். 

"மீண்டும்  சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தியது பிரான்ஸ்"

கொரோனா வைரஸ் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், பிரான்ஸ் அரசு மீண்டும் சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.
பாரிஸ், மார்சேய் உள்ளிட்ட ஏழு நகரங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவை அதிபர் மேக்ரான் அறிவித்துள்ளார். இந்த கட்டுப்பாடு, குறைந்தது நான்கு வாரங்களுக்கு நீடிக்கும் என தெரிவித்துள்ளார். வீடுகளில் உள்ளவர்கள் இந்த நேரங்களில் உணவகங்கள் அல்லது கடைகளுக்கு செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்