மாணவர்கள் அமைப்பினர் போராட்டம் - போலீசார் கூட்டத்தை கலைக்க முயற்சி

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அமைப்பினருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
மாணவர்கள் அமைப்பினர் போராட்டம் - போலீசார் கூட்டத்தை கலைக்க முயற்சி
x
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அமைப்பினருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. புதிய 
வேலை வாய்ப்பு சட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் 
அமைப்பினரை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைக்க
முயன்றனர். இதனால் போராட்டக்காரர்கள் போலீசார் மீது பதில் தாக்குதலில் ஈடுபட்டதால் அப்பகுதியே போர்க்களமானது. ஏராளமானோரை போலீசார் கைது செய்தனர். 

அமெரிக்காவில் நினைவுச் சின்னம் சிதைப்பு - இனவாதத்தை கவுரவிக்கும் விதமான சின்னங்கள் அழிப்பு
 
 அமெரிக்காவில் பூர்வீக மக்கள் தினத்தை கொண்டாடியவர்கள், நியூ மெக்சிகோவில் இருந்த நினைவுச் சின்னம் ஒன்றை இடித்து தள்ளினர். அமெரிக்காவில் இனவாதத்தை கவுரவிக்கும் விதமாக எழுப்பப்பட்ட சின்னங்களை அழித்துவரும் அவர்கள், இந்த சின்னம் அமெரிக்காவின் பூர்வீக மக்களை கொன்றதன் புகழைபாடுகிறது எனக் கூறியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக இருவரை கைது செய்துள்ளதாக அம்மாகாண போலீசார் தெரிவித்துள்ளனர். 

ரோம் நகரில் நடக்கும் மிஷன் இம்பாசிபிள்-7 படப்பிடிப்பு - 
ஆக்‌ஷன் காட்சிகளில் அசத்தும் டாம் க்ரூஷ்

டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் மிஷன் இம்பாசிபிள். இந்த பட வரிசையில் இதுவரை 6 படங்கள் வெளியாகியுள்ள நிலையில், 7வது பாகத்திற்கான படப்பிடிப்பு இத்தாலியில் உள்ள ரோம் நகரில் நடந்து வருகிறது. ஆக்‌ஷன் காட்சிகள் இந்த பகுதியில் படம்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனைஏராளமான பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தபடி கூட்டமாக நின்று ரசித்து வருகின்றனர். இந்த படம் 2021ஆம் ஆண்டு நவம்பரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று மிஷன் இம்பாசிபிள் படத்தின் 8ஆவது பாகம் 2022ஆம் ஆண்டு நவம்பரில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் எழில் கொஞ்சும் சவுசூ நகர் - அதிபர் ஜின்பிங் சுற்றுலா

சீனாவின் வரலாற்று சுற்றுலா தலமான சவுசூ நகரில் அதிபர் ஜின்பிங் ஆய்வு செய்தார். சீனா வரும் சுற்றுலா பயணிகளின் முக்கிய தலமாக விளங்கும்  வரலாற்று சிறப்புமிக்க சவுசூ சிட்டியில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் அதிபர் ஜின்பிங் நகரில் சுற்றுலா மேற்கொண்டு ஆய்வு செய்தார். மேலும் வரலாற்று சிறப்புமிக்க கட்டிட கலை நகரமான பைபாங்கிலும் சுற்றுலா மேற்கொண்டார்.  




Next Story

மேலும் செய்திகள்