கொரோனா சமூக பரவலுக்கு அனுமதியளிக்கும் யோசனை - உலக சுகாதார அமைப்பு எதிர்ப்பு

கொரோனா வைரஸ் சமூக பரவலை அனுமதித்து, இயற்கையாகவே மக்கள் மத்தியில் நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்கலாம் என்ற யோசனைக்கு உலக சுகாதார அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா சமூக பரவலுக்கு அனுமதியளிக்கும் யோசனை - உலக சுகாதார அமைப்பு எதிர்ப்பு
x
கொரோனா வைரஸ் சமூக பரவலை அனுமதித்து, இயற்கையாகவே மக்கள் மத்தியில் நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்கலாம் என்ற யோசனைக்கு உலக சுகாதார அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  இதுபற்றி அந்த அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் ஆதனோம் பேசுகையில், இதுபோன்று நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்கம் வியூகம் இதுவரையில் எந்த தொற்று பரவலிலும் வெற்றியடையவில்லை என்றும் இது அறிவியல்பூர்வமற்றது என்றும் கூறியுள்ளார். மேலும், இதுவரையில் புரிந்துக்கொள்ள முடியாத ஒரு வைரசை மக்கள் மத்தியில் அனுமதிப்பது என்பது மிகவும் பேராபத்தை உருவாக்கும் என எச்சரித்துள்ளார். இது நெறியற்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்