கொரோனா சிகிச்சைக்கு பின் பிரசார களத்தில் அதிபர் டிரம்ப் - ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகம்

கொரோனா சிகிச்சைக்குப் பிறகு அதிபர் டிரம்ப் முதல்முறையாக புளோரிடாவின் சான்போர்டில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றார்.
கொரோனா சிகிச்சைக்கு பின் பிரசார களத்தில் அதிபர் டிரம்ப் - ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகம்
x
கொரோனா சிகிச்சைக்குப் பிறகு அதிபர் டிரம்ப் முதல்முறையாக புளோரிடாவின் சான்போர்டில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றார். அங்கு திரண்டிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகமாக பேசிய அவர், இதுதான் உண்மையான தேர்தல்  கணிப்பு என்று கூறினார். ஆதரவாளர்களின் பிரார்த்தனை தனக்கு உத்வேகம் அளிப்பதாகவும், அதற்கு தலைவணங்குவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார். பிரசாரத்தில் பங்கேற்ற டிரம்ப், முககவசம் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க தேர்தல் முன்கணிப்பு மாதிரி - வெற்றி வாய்ப்பில் ஜோ பிடன் சாதனை படைக்க வாய்ப்பு

தேர்தல் முன்கணிப்பு மாதிரியில் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன்,  வெற்றி வாய்ப்பில் புதிய சாதனை படைப்பார் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிபர் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் ஆகியோர் இடையே பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில்  538 தேர்தல் தேர்தல் முன்கணிப்பு மாதிரியில்  352-ல் ஜோ பிடனுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் ஒட்டுமொத்த சதவீதம் 86 புள்ளி 1 ஆக  உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் அதிபர் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்த கிலாரி கிளிண்டனும், முன்கள கருத்துக்கணிப்பு மாதிரியில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தடுப்பு மருந்து சோதனை - பரிசோதனையை நிறுத்தியது ஜெ அண்ட் ஜெ நிறுவனம்

கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் ஈடுபட்டுள்ள ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம், அதனை தற்காலிகமாக நிறுத்த  முடிவு செய்துள்ளது. இந்நிறுவனம் தனது தயாரிப்பு மருந்தை பரிசோதிக்க ஆன்லைனில் விண்ணப்பம் கோரியதில் அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 60 ஆயிரம் பேர் விண்ணப்பம்  செய்திருந்தனர். இதில் அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் சிலருக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, பரிசோதனையை தற்காலிகமாக நிறுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கொரோனா எதிரொலி- முதுகுடன் முதுகு உரசி நடனம்

கொரோனா விழிப்புணர்வாக முதுகுடன் முதுகு உரசி மாணவர்கள் நடனமாடும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக மற்றவருடன் ஏற்படும் நெருக்கத்தை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படும் நிலையில் அதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செக் குடியரசு மாணவர்கள் முதுகுடன் முதுகு உரசி நடனமாடி உள்ளனர். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.    

ஸ்பெயின் தேசிய தினம் கொண்டாட்டம் - ராணுவ அணிவகுப்பில் அரசர் பங்கேற்பு

ஸ்பெயின் தேசிய தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தலைநகர் மாட்ரிட்டில் நடந்த விழாவில் அரசர் பெலப்பி கலந்து கொண்டு சிறப்பித்தார். ராணுவ வீரர்கள் மத்தியில் தேசிய கொடியை ஏற்றிய அரசர் பெலப்பி பின் ராணுவ அணிவகுப்பிலும் கலந்து கொண்டார். கொரோனா தொற்று காரணமாக நாட்டு மக்களுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் விழா களையிழந்து காணப்பட்டது.   

ஒரே ஒரு நபருக்காக திறக்கப்பட்ட "மச்சு பிச்சு" - ஜப்பான் சுற்றுலா பயணிக்கு இன்ப அதிர்ச்சி 

பெரு நாட்டில் ஒரே ஒரு சுற்றுலா பயணிக்காக புகழ்பெற்ற மச்சு பிச்சு சுற்றுலா தலம் திறக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக புகழ்பெற்ற சுற்றுலா தலமான மச்சு பிச்சு மூடப்பட்டது. இது அங்கு வந்த ஜப்பான் பயணி டக்காயமாவுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த நிலையில் நாடு திரும்ப முடியாமல் அவதிப்பட்ட டக்காயமாவுக்கு பெரு அரசு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது.  
கடந்த 7 மாதங்களாக மூடப்பட்ட மச்சு பிச்சு தலத்தை அவருக்காக மட்டும் திறந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்