கடந்த 20 ஆண்டுகளில் இயற்கை பேரிடர்கள் அதிகரிப்பு - ஆசியா மிகவும் அதிகமான பாதிப்பை சந்தித்துள்ளது

உலகில் கடந்த 20 ஆண்டுகளில் அதிகமான இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டுள்ளது என ஐ.நா. தெரிவித்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் இயற்கை பேரிடர்கள் அதிகரிப்பு - ஆசியா மிகவும் அதிகமான பாதிப்பை சந்தித்துள்ளது
x
உலகில் கடந்த 20 ஆண்டுகளில் அதிகமான இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டுள்ளது என ஐ.நா. தெரிவித்துள்ளது. இயற்கை பேரிடர் குறைப்பு தினத்தையொட்டி ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகப்பட்சமாக சீனா 577 இயற்கை பேரிடர்களையும், அமெரிக்கா 467 பேரிடர்களையும் சந்தித்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் 321 பேரிடர்களுடன் இந்தியா மூன்றாவது இடம் பிடித்துள்ளது. உலகில் அதிகமாக பாதிக்கப்பட்ட முதல் 10 நாடுகளில் 8 நாடுகள் ஆசியாவை சேர்ந்தவையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை பேரிடர்களை குறைக்கும் நடவடிக்கைகளை உலக நாடுகள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என ஐ.நா. கேட்டுக்கொண்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்