வெள்ளை மாளிகை பால்கனியில் இருந்து ஆதரவாளர்களை நோக்கி கையசைத்த டிரம்ப்

தான் விரைந்து நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகை பால்கனியில் இருந்து ஆதரவாளர்களை நோக்கி கையசைத்த டிரம்ப்
x
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர்  3- ல் நடைபெற உள்ள நிலையில் அதிபர் டிரம்ப் மற்றும்  அவரது மனைவி மெலனியாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த கடந்த ஒன்றாம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்டனர்.  டிரம்புக்கு காய்ச்சல் அதிகமானதை அடுத்து, மேரிலேண்டில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு  அழைத்துச் செல்லப்பட்டார். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுக் கொண்டே அலுவலக பணிகளை கவனித்து வந்த டிரம்ப்,  கடந்த 5-ந்தேதி வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். இதனை  தொடர்ந்து தான் முற்றிலும் நலமாக இருப்பதாகவும், ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தை மீண்டும் தொடங்க ஆவலுடன் இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார். இந்நிலையில் டிரம்புக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை முடிவடைந்ததாகவும் 10-ம் தேதி முதல் அவர் தனது அரசு பணிகளை மீண்டும் தொடங்குவார் என்றும் வெள்ளை மாளிகை தலைமை மருத்துவர் சீன் கான்லி தெரிவித்தார். இதனிடையே, அதிபர் டிரம்ப்
 வெள்ளை மாளிகையில் உள்ள பால்கனியில் இருந்து தனது ஆதரவாளர்களை நோக்கி நேற்று  கை அசைத்தார். பின்னர் பேசிய அவர் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி என தெரிவித்தார். உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்றும், அதிபர் டிரம்ப் அப்போது தெரிவித்தார்.

ஜோ பிடனுக்கு கொரோனா இல்லை - 2-வது பரிசோதனை முடிவில் தெளிவு 

தனக்கு கொரோனா தொற்று இல்லை என அமெரிக்க ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார். அதிபர் டிரம்புடன் இனைந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஈடுபட்டதால் ஜோ பிடனுக்கு தொற்று இருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் முதல் பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் ஜோ பிடன், தனக்கு நடந்த 2-வது பிரிசோதனையின் முடிவிலும் தொற்று இல்லை என தெரிவித்துள்ளார். 

பொருளாதாரத்தில் கொரோனா பரவல் எதிரொலி - 23 ஆண்டுகள் பின்னோக்கி செல்லும் இத்தாலி 

இத்தாலியின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 10 சதவீதமாக குறையும் என அந்நாட்டு நிதி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் நிலவும் அசதாரண சூழல் காரணமாக உள்நாட்டு உற்பத்தி 10 சதவீதம் குறையும் நிலையில் நாட்டின் பொருளாதாரம் 23 ஆண்டுகள் பின்னோக்கி செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேலைவாய்ப்பு விகிதத்தில் 1.8 சதவீதம் பேர் அதாவது 4 லட்சத்து 10 ஆயிரம் தங்கள் வேலையை இழக்கும் நிலை உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.     

புது புது உச்சம் தொடும் கொரோனா தொற்று - ஒரே நாளில் 26 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி 

பிரான்சில் புதிய உச்சமாக ஒரே நாளில் 26 ஆயிரத்து 896 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 7 லட்சத்து 18 ஆயிரத்து 873 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் சிகிச்சை பலனின்றி 54 பேர் இறந்ததை அடுத்து மொத்த இறப்பு 32 ஆயிரத்து 684 உயர்ந்து உள்ளது. கடந்த 7 நாட்களில் மட்டும் அந்நாட்டில் 4 ஆயிரத்து 999 பேர் கொரோனா காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.     

Next Story

மேலும் செய்திகள்