அதிபர் வேட்பாளர்கள் பங்கேற்கும் மியாமி விவாதம்: "டிரம்ப் உடல்நிலை பொறுத்தே பங்கேற்பது பற்றி முடிவு" - ஜோ பிடன்

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக அடுத்த வாரம் இரு பிரதான கட்சி வேட்பாளர்கள் பங்கேற்கும் விவாதம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிபர் வேட்பாளர்கள் பங்கேற்கும் மியாமி விவாதம்: டிரம்ப் உடல்நிலை பொறுத்தே பங்கேற்பது பற்றி முடிவு - ஜோ பிடன்
x
அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கொரோனா தொற்று குணமாகாத நிலையில், அது நடைபெறுவதற்கு சாத்தியமில்லை என், ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார். மியாமியில் வரும் 15 ஆம் தேதி நடைபெற உள்ள இந்த விவாதம், கொரோனா பாதுகாப்பு வழிமுறையில் நடைபெற்றால் மட்டுமே அதில் பங்கேற்க முடிவு செய்துள்ளதாக ஜோ பிடன் தெரிவித்துள்ளார். பென்சில்வேனியாவில் பிரச்சாரத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பிடன், டிரம்புக்கு கொரோனா தொற்று நீடிக்கும் நிலையில், மியாமி விவாதம் நடைபெறுவது சந்தேகம் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டிரம்பின் தேர்தல் பிரச்சார செய்தித் தொடர்பாளர் டிம் முர்டாக், அதிபர் டிரம்ப் ஆரோக்கியமாக இருப்பார் என்றும், விவாதத்தில் பங்கேற்பார் எனவும் தெரிவித்துள்ளார். 







Next Story

மேலும் செய்திகள்