முக கவசம் மற்றும் சமூக இடைவெளி தொடர்பான டிரம்ப் கருத்து - கடுமையாக விமர்சித்த ஜோ பிடன்

முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத அதிபர் டிரம்பை, ஜனநாயக கட்சி அதிபர் ​வேட்பாளர் ஜோ பிடன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
முக கவசம் மற்றும் சமூக இடைவெளி தொடர்பான டிரம்ப் கருத்து - கடுமையாக விமர்சித்த ஜோ பிடன்
x
முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத அதிபர் டிரம்பை, ஜனநாயக கட்சி அதிபர் ​வேட்பாளர் ஜோ பிடன் கடுமையாக விமர்சித்துள்ளார். நான்கு நாள் சிகிச்சைக்கு பின்னர் வெள்ளை மாளிகை திரும்பிய டிரம்பின் பேச்சு பொறுப்பற்றது என ஜோ பிடன் விமர்சித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் முக கவசம் தேவையில்லை, சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டாம் என சொல்வது பொறுப்பான செயலா எனவும் ஜோ பிடன் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா சிகிச்சை பெற்று திரும்பிய அதிபர் டிரம்ப் மக்களுக்கு, முக கசவம் தொடர்பான சரியான பாடத்தை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். உலகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்களின் உயிரைக் குடித்த, நோய் தொற்று பற்றி தவறாக டிரம்ப் பேசி வருவதாகவும் ஜோ பிடன் சாடியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்