புகழ்பெற்ற கிரோ டி இத்தாலி சைக்கிள் பந்தயம் - 2-வது சுற்றில் இத்தாலி வீரர் டிகியோ உலிசி வெற்றி

புகழ்பெற்ற கிரோ டி இத்தாலி சைக்கிள் பந்தயத்தின் 2-வது சுற்றில் டிகியோ உலிசி வெற்றி பெற்றார்.
புகழ்பெற்ற கிரோ டி இத்தாலி சைக்கிள் பந்தயம் - 2-வது சுற்றில் இத்தாலி வீரர் டிகியோ உலிசி வெற்றி
x
புகழ்பெற்ற கிரோ டி இத்தாலி சைக்கிள் பந்தயத்தின் 2-வது சுற்றில் டிகியோ உலிசி வெற்றி பெற்றார். கிரோ டி இத்தாலி சைக்கிள் பந்தய தொடரின் 2-வது சுற்று ஆட்டத்தில் உள்ளூர் நாயகன் டிகியோ உலிசி வெற்றி பெற்றார்.  149 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை கடந்த உலிசி முதல் இடத்தை பிடித்து கோப்பையை தட்டி சென்றார். இந்த வெற்றியின் மூலம் அவர் கோப்பையை 7-வது முறையாக வெல்வது குறிப்பிடத்தக்கது.     

சீன தேசிய தின கொண்டாட்டம் - 46 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய்

சீன தேசிய தின விடுமுறையின் முதல் 4 நாட்களில் அரசுக்கு 46 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வருவாய் கிடைத்து இருப்பதாக சீன சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து தப்பித்த சீன மக்கள் தேசிய தின விடுமுறையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 8 நாட்கள் கொண்ட தேசிய விடுமுறையில் முதல் 4 நாட்களில் மட்டும் சீன அரசுக்கு 45 புள்ளி 9 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வருவாய் கிடைத்து இருப்பதாக சீன சுற்றுலாத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.       

கரடுமுரடான பாதையில் சைக்கிள் பந்தயம் - ஆஸ்திரிய வீரர் டேவிட் டிரம்மர் வெற்றி

ஆஸ்திரியாவில் நடந்த பிரபல மலையேற்று சைக்கிள் பந்தயத்தில் டேவிட் டிரம்மர் வெற்றி பெற்றார். ஆயிரத்து 650 மீட்டர் தூரத்தை டிரம்மர் 49 விநாடிகளில் கடந்து வெற்றி பெற்றார். பெண்கள் பிரிவில் வெலன்டினா ஹோல் பந்தய தூரத்தை 3 நிமிடங்களில் கடந்து வெற்றி பெற்றார்.     


Next Story

மேலும் செய்திகள்