சீனாவில் களைகட்டியுள்ள தேசிய தினக் கொண்டாட்டம் - 8 நாள் தேசிய விடுமுறையால் சுற்றுலா செல்லும் மக்கள்

சீனாவின் தேசிய தினக் கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ள நிலையில், கிழக்கு மாகாணத்தில் இயக்கப்படும் புல்லட் ரயில்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
சீனாவில் களைகட்டியுள்ள தேசிய தினக் கொண்டாட்டம் - 8 நாள் தேசிய விடுமுறையால் சுற்றுலா செல்லும் மக்கள்
x
சீனாவின் தேசிய தினக் கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ள நிலையில், கிழக்கு மாகாணத்தில் இயக்கப்படும் புல்லட் ரயில்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. இந்த ரயில் பாதை முழுவதும் இயற்கை காட்சிகளால் நிறைந்துள்ள பகுதி என்பதால் சுற்றுலா பயணிகள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களில் அதிகம் காணப்படுகிறது. சீன தேசிய தினத்தையொட்டி அக்டோபர் 1 முதல் 8 ஆம் தேதி வரை 8 நாட்கள் தேசிய விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள நிலையில், மக்கள் கூட்டம் கூட்டமாக சுற்றுலா சென்று வருகின்றனர். கடந்த சனிக்கிழமை மட்டும் ரயில்களில் ஒரு கோடியே 14 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக ​சீன ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த ரயில் மொத்தம் ஆயிரத்து 112 இருக்கைகள் உள்ள நிலையில், ஒரு இடம் கூட காலியில்லை என்கிறார் அந்த புல்லட் ரயில் நடத்துநர்.

இலங்கையில் சில பகுதிகளில்...மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்

இலங்கையில் மீண்டும் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கொழும்பு புறநகரான கம்பகா மாவட்டத்தின் மினுவாங்கொட மற்றும் திவுலபிடிய பகுதியில் உள்ள 7 கிராமங்களில்  மறுஅறிவிப்பு வரும் வரை போலீஸ் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கம்பகா- திவுலபிடிய பகுதியில் வசித்து வரும் 39 வயதுடைய பெண் ஒருவருக்கும், அவரது மகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதை  அடுத்து இந்த நடவடிக்கை என ராணுவம் தெரிவித்துள்ளது.








Next Story

மேலும் செய்திகள்