இங்கிலாந்து - அமெரிக்க ராணுவங்கள் கூட்டுப்பயிற்சி : இங்கிலாந்து கடற்பகுதியில் நடந்தது

இங்கிலாந்து கடற்பகுதியில் அமெரிக்க - இங்கிலாந்து ராணுவ வீரர்கள் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டனர்.
இங்கிலாந்து - அமெரிக்க ராணுவங்கள் கூட்டுப்பயிற்சி : இங்கிலாந்து கடற்பகுதியில் நடந்தது
x
இங்கிலாந்து கடற்பகுதியில் அமெரிக்க - இங்கிலாந்து ராணுவ வீரர்கள் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டனர். இங்கிலாந்து கடலோர பகுதிகளில் நடந்த கூட்டு பயிற்சியில் இங்கிலாந்து, அமெரிக்க விமான படை மற்றும்  கப்பல் படை வீரர்கள் கலந்து கொண்டனர். கொரோனா தொற்று பரவலிலும் இரு நாட்டு வீரர்கள் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.   

புகழ்பெற்ற கிரோ டி இத்தாலி சைக்கிள் பந்தயம் - 2வது சுற்றில் இத்தாலி வீரர் டிகியோ உலிசி வெற்றி 

புகழ்பெற்ற கிரோ டி இத்தாலி சைக்கிள் பந்தயத்தின் 2-வது சுற்றில் டிகியோ உலிசி வெற்றி பெற்றார். கிரோ டி இத்தாலி சைக்கிள் பந்தய தொடரின் 2-வது சுற்று ஆட்டத்தில் உள்ளூர் நாயகன் டிகியோ உலிசி வெற்றி பெற்றார்.  149 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை கடந்த உலிசி முதல் இடத்தை பிடித்து கோப்பையை தட்டி சென்றார். இந்த வெற்றியின் மூலம் அவர் கோப்பையை 7-வது முறையாக வெல்வது குறிப்பிடத்தக்கது.     

சீன தேசிய தின கொண்டாட்டம்  - சீன சுற்றுலாத்துறை அமைச்சகம் தகவல்

சீன தேசிய தின விடுமுறையின் முதல் 4 நாட்களில் அரசுக்கு 46 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வருவாய் கிடைத்து இருப்பதாக சீன சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து தப்பித்த சீன மக்கள் தேசிய தின விடுமுறையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 8 நாட்கள் கொண்ட தேசிய விடுமுறையில் முதல் 4 நாட்களில் மட்டும் சீன அரசுக்கு 45 புள்ளி 9 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வருவாய் கிடைத்து இருப்பதாக சீன சுற்றுலாத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.       

அதிபருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் - பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு

பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க்கில் அந்நாட்டு அதிபருக்கு எதிராக பத்தாயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதிபர் லுகான்ஸ்கோ சட்ட விரோதமாக செயல்பட்டு அதிபர் பதிவியை 6-வது முறையாக கைப்பற்றி இருப்பதாக மக்கள் கோஷம் எழுப்பினர். மேலும் அதிபர் பதவியை லுகான்ஸ்கோ ராஜினாமா செய்ய வேண்டும் என்று இசை வாத்தியங்களை வாசித்தவாறு கண்டனம் தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்