டிரம்ப்பிற்கு கொரோனா நோய் தொற்று உறுதி - தேர்தல் வெற்றி வாய்ப்பை மேலும் பாதிக்கும்

டிரம்ப்பிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,இது அவரின் தேர்தல் வெற்றி வாய்ப்பை மேலும் பாதிக்கும் என்று பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
டிரம்ப்பிற்கு கொரோனா நோய் தொற்று உறுதி - தேர்தல் வெற்றி வாய்ப்பை மேலும் பாதிக்கும்
x
ஏற்கனவே அவர் கருத்து கணிப்புகளில் ஜோ பிடனை விட மிகவும் பின் தங்கியுள்ள நிலையில், கொரோனா தொற்றினால், இனி சில வாரங்களுக்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. முகக் கவசம் அணிவதை டிரம்ப் எள்ளி நகையாடி வந்த நிலையில், தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் முகக் கவசம் அணியாமல் கலந்து கொண்டார். சமீபத்தில் ஜோ பிடனுடன் நடந்த தொலைகாட்சி விவாதத்தில் பேசும் போது, சக மனிதரை விட 200 அடி தள்ளி இருந்தாலும் ஜோ பிடன் மிகப் பெரிய முகக் கவசம் அணிகிறார் என்று டிரம்ப் அவரை கிண்டல் செய்திருந்தார். இதனிடையே, டிரம்ப் அரசு சரியான முறையில் தொற்றை எதிர் கொள்ளவில்லை என்று ஜோ பிடன் விமர்சனம் செய்து வந்தார்.இந்த நிலையில், டிரம்ப்பிற்கு தொற்று ஏற்பட்டுள்ளது அவர்களின் விமர்சனங்களுக்கு வலு சேர்க்கும் என்று கருதப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்