சர்வதேச விமான நிலையத்தை நோக்கி ராக்கெட் லாஞ்சர்? - அடுத்தடுத்து பறந்து வந்த 3 ராக்கெட் லாஞ்சர்கள்

ஈராக்கின் எர்பில் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே அடுத்தடுத்து 3 ராக்கெட் லாஞ்சர்கள் ஏவப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
சர்வதேச விமான நிலையத்தை நோக்கி ராக்கெட் லாஞ்சர்? - அடுத்தடுத்து பறந்து வந்த 3 ராக்கெட் லாஞ்சர்கள்
x
ஈராக்கின் எர்பில் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே அடுத்தடுத்து 3 ராக்கெட் லாஞ்சர்கள் ஏவப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. நான்காவதாக ஈராக்கின் எதிர்கட்சி தலைமையிடத்தை நோக்கி ஏவப்பட்ட ராக்கெட் லாஞ்சர் வானிலே இடைமறித்துவிட்டதாக குர்தீஸ் பேஸ்மெர்கா கூறியுள்ளது. அமெரிக்க படை வீர‌ர்கள் தங்கியிருக்கும் பகுதிக்கும் குறி வைக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அதனை மறுத்துள்ள குர்தீஸ் பாதுகாப்பு அமைப்பு, வடக்கு ஈராக் மாகானமான Nineveh என்ற இடத்தில் இருந்து ஏவப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 

உணவு விடுதிகளில் அமர்ந்து உணவருந்த அனுமதி - சமூக இடைவெளியின்றி அமர்ந்து உணவருந்தும் மக்கள்

கொரோனா தொற்று உச்சத்தை தொட்டு வரும் நிலையில், அமெரிக்காவில் ஹோட்டல்களில் அமர்ந்து உணவருந்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகரில் பொதுமக்கள் சமூக இடைவெளி ஏதும் இன்றி, இருக்கைகளில் அமர்ந்து உணவு அருந்தினர். பாதுகாப்போடு ஹோட்டல்கள் செயல்பட வழிமுறைகளையும் அரசு கூறியுள்ள நிலையில், சமூக இடைவெளியின்றி பொதுமக்கள், உணவு விடுதிகளில் கூடி உணவருந்தினர். 

2.4 மில்லியன் ஏக்கர் கருகியது - கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ

பொலிவியா நாட்டில் பரவி வரும் காட்டுத்தீயால், சுமார் இரண்டை மில்லியன் ஏக்கர் பசுமையான காடுகள் கருகியுள்ளன. அதிகப்படியான வெப்பநிலையும், காற்றும் தீயை கட்டுக்குள் கொண்டுவரமுடியாத நிலைக்கு தள்ளியுள்ளதாக, அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் லூயிஸ் லோபஸ் தெரிவித்துள்ளார். 3 ஆயிரத்து 128 இடங்கள் ஆபத்தான பகுதிகளாக அறியப்பட்ட நிலையில், நேற்று பெய்த கனமழையால் அந்த எண்ணிக்கை 1,377 ஆக குறைந்துள்ளது. 

"சர்வதேச மன்றங்களில் இந்தியாவை இழிவுபடுத்தும் பாக்."

அனைத்து சர்வதேச மன்றங்களிலும் இந்தியாவை இழிவுபடுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை, பாகிஸ்தான் செய்து வருவதாக,ஐ.நா.வுக்கான, இந்தியாவின் முதல் செயலாளர் பவன் பாதே தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவின் மனித உரிமைகள் பேரவையின் 45 வது அமர்வில் பேசிய அவர், இந்தியாவை பற்றி, இது போன்ற கருத்துக்களை பாகிஸ்தான் கூறி வருவதாக தெரிவித்தார். இதனால், பல்லாயிரக்கணக்கான சிறுபான்மையினர், அந்நாட்டை விட்டு வெளியேறுவதை நிறுத்த மாட்டார்கள் என்ற உண்மை, மாறப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

சிறுவர்கள் தினம் அல்ல - துக்க தினம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் சார்பாக இலங்கையின் வவுனியா பேருந்து நிலையம் முன்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அப்போது எங்கள் உறவுகளின் உண்மை நிலையை தெரிவிக்க வலியுறுத்தி 3 வருடங்களுக்கு மேலாக போராடியும், எந்தவொரு அரசும் தங்களுக்கு நீதியை வழங்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர். இதனால் நாளை சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், அதனை துக்க தினமாக அனுசரிக்க உள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர். 



Next Story

மேலும் செய்திகள்