கலிஃபோர்னியாவில் உருவாகியுள்ள புதிய காட்டுத் தீ - தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் தீவிரம்
பதிவு : செப்டம்பர் 28, 2020, 09:40 AM
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கடந்த வார இறுதியில் உருவான காட்டுத் தீக்கு கிளாஸ் பையர் என பெயரிடப்பட்டு உள்ளது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கடந்த வார இறுதியில் உருவான காட்டுத் தீக்கு கிளாஸ் பையர் என பெயரிடப்பட்டு உள்ளது. சனிக்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கியுள்ள இந்த காட்டுத் தீ பரவலை அடுத்து, பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அப்பகுதி மக்களுக்கு நாகா கிராம நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இந்த தீ மிகவும் வேகமாக அழிவை ஏற்படுத்தும் வகையில் பரவி வருவதாக தெரிவித்துள்ள கலிஃபோர்னியா தீயணைப்புத் துறையினர், தீ பரவலை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர். குறைந்த ஈரப்பதம் மற்றும் அப்பகுதியில் வீசி வரும் காற்றும் இந்த தீ பரவலுக்கு காரணம் என கூறப்படுகிறது. 

பெலாரஸ் அதிபர் பதவி விலகக்கோரி போராட்டம் தீவிரம் - போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோர்  பேர் கைது 

பெலாரஸ் அதிபர் தேர்தல் கடந்த மாதம் நடைபெற்ற நிலையில், இதில் மோசடி நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், கடந்த புதன்கிழமை அதிபராக  லுகாஷென்கோ எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பதவியேற்றது அங்கு பெரும் போராட்டத்திற்கு வழிவகுத்துள்ளது. தேர்தலில் முறைகேடு ஏதும் செய்யவில்லை என அதிபராக பொறுப்பேற்றுள்ள 
லுகாஷென்கோ விளக்கம் அளித்த நிலையிலும் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. நேற்று நடைபெற்ற போராட்டத்தில் மட்டும், 200 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக பெலாரஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கோமல், மின்ஸ்க் உள்ளிட்ட நகரங்களில் 7-வது வாரமாக போராட்டம் தொடரும் நிலையில், போராட்டக்காரர்களை, கலவர தடுப்பு போலீசார் கண்ணீர்புகை குண்டு வீசியும், தடியடி நடத்தியும் கலைத்தனர். 


டிக்டாக் செயலி தொடர்பான வழக்கில் கொலம்பியா நீதிமன்றம் அதிரடி

அதிபர் தேர்தலை தொடர்ந்து டிக்டாக் செயலிக்கு, டிரம்ப் அரசு விதித்த தடை தொடர்பான வழக்கில், டிரம்ப் அரசின் உத்தரவை தள்ளிவைத்து கொலம்பியா மாவட்ட நீதிபதி கார்ல் நிக்கோல்ஸ் உத்தரவிட்டுள்ளார். நேற்று நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது டிக்டாக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், டிரம்ப் அரசின் நிர்வாக உத்தரவு வணிகம் தொடர்பான முதல் திருத்த உரிமைகள் மற்றும் வணிகத்திற்கு ஈடுசெய்ய முடியாத தீங்கு விளையும் என வாதிட்டார். மேலும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் டிக்டாக் செயலிக்கு தடைவிதித்து உத்தரவு பிறப்பிக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை என வாதிட்டார். நவீன காலத்தின் நகர சதுக்கம் போன்றது தான் டிக் டாக் செயலி என்றும், பொது மன்றத்தின் கதவுகளை பூட்டுவதும், நகர சதுக்கத்தை அகற்றுவதும் ஒன்று தான் என டிக்டாக் செயலி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜான் ஹால் வாதிட்டார்.

ஸ்பெயின் தீவில் பரவிய காட்டுத் தீ...கட்டுக்குள் கொண்டு வர உதவிய மழை

ஸ்பெயின் தீவான மல்லோர்காவில் உள்ள இயற்கை பூங்காவான எஸ்'அல்பூபெரா டி அல்குடியாவில் ஏற்பட்ட பயங்கர தீயை, வீரர்கள் நீண்ட நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆயிரத்து 82 ஏக்கர் நிலத்தில், 438 ஏக்கர் நிலம் முற்றிலும் தீயில் எரிந்து சேதமானதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை பற்றிய தீ, பலத்த காற்றால்  வேகமாக பரவியதால் இந்த இழப்பு என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 25-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர் உதவி உடன் நேற்று மாலை வரை பணிகள் நடைபெற்ற நிலையில், நள்ளிரவு பெய்த மழையால் தீ கட்டுக்குள் வந்துள்ளது.தொடர்புடைய செய்திகள்

"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்" - நடிகை ராஷ்மிகா

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.

352 views

கொரோனா தடுப்பு மருந்து விலங்குகள் மீதான பரிசோதனையை துவக்கிய குழு

டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில் தயாராகி வரும் கொரோனா தடுப்பு மருந்தை விலங்குகள் மீது செலுத்தி பரிசோதனையை மருத்துவக் குழு துவங்கியுள்ளது.

142 views

இலங்கையில் 20-வது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு - தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விளக்குகளை அணைத்து போராட்டம்

இலங்கை அரசு கொண்டு வரும் 20-வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, விளக்குகளை அனைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.

43 views

பிற செய்திகள்

இலங்கையில் 20-ஆவது சட்ட திருத்தம் நிறைவேற்றம் - 156 எம்பிக்கள் ஆதரவு, 65 எம்பிக்கள் எதிர்ப்பு

இலங்கை நாடாளுமன்றத்தில் 20-ஆவது சட்டத் திருத்தம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு உள்ளது.

3 views

ஆடைகளை கழற்றி போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள்

ஸ்பெயினில் மருத்துவர்கள் ஆடைகளை கழற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

14 views

பச்சை நிறத்தில் பிறந்த நாய் குட்டி - இத்தாலியில் நடந்த விநோத சம்பவம்

இத்தாலியில் பச்சை நிறத்தில் நாய் குட்டி பிறந்த விநோத சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

15 views

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 3 வீரர்கள் தரையிறங்கினர்

பூமியை சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து மூன்று விண்வெளி வீரர்கள் பத்திரமாக தரையிறங்கினர்.

17 views

"உலகின் மிக​ப்பெரிய கடற்படை தளம் அமைக்க சீனா கோரிக்கை" - இங்கிலாந்து பாதுகாப்புத்துறை செயலர் பென் வா​லஸ் தகவல்

உலகின் மிகப்பெரிய கடல்சார் கடற்படையை உருவாக்க சீன கோரிக்கை விடுத்திருப்பதாக இங்கிலாந்து பாதுகாப்புத் துறை செயலாளர் பென் வா​லஸ் தெரிவித்துள்ளார்.

27 views

(22.10.2020) இன்றைய உலக செய்திகள்

(22.10.2020) இன்றைய உலக செய்திகள்

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.