சர்ச்சைக்குரிய பகுதியில் ஆர்மீனியா விமானப்படை தாக்குதல் - பற்றி எரிந்த ராணுவ டாங்கிகள், எண்ணெய் வயல்கள்...

சர்ச்சைக்குரிய நாகோர்னா மற்றும் கராபாக் பகுதியில், ஆர்மீனியாவிற்கும், அசர்பைஜான் நாட்டிற்கும் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது.
சர்ச்சைக்குரிய பகுதியில் ஆர்மீனியா விமானப்படை தாக்குதல் - பற்றி எரிந்த ராணுவ டாங்கிகள், எண்ணெய் வயல்கள்...
x
சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து சென்ற ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான் ஆகிய நாடுகள் இடையே நாகோர்னா மற்றும் கராபாக் பகுதி குறித்து அவ்வப்போது மோதல் வெடித்து வருகிறது. இந்நிலையில் டெர்டார் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், அசர்பைஜானில், ஆர்மீனியா நாட்டு விமானப்படை வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் அசர்பைஜான் ராணுவம், அதே பகுதியில், ஆர்மீனியா நாட்டின் எல்லையில், பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், ராணுவ வாகனங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் எண்ணெய் வயல்கள் தீப்பற்றி எரிந்தன . இரு நாடுகளுக்கும் இடையே, சர்ச்சைக்குரிய நாகோர்னா மற்றும் கராபாக் பகுதியில், கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் மோதல் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்