கொரோனா தொற்றிலும் குறையாத பொருளாதாரம் - பொருளாதார உச்சத்தில் சீன முதலீடுகள்

கொரோனா தொற்றிலும் சீனாவின் பொருளாதாரம் ஏற்றம் கண்டுள்ளது.
கொரோனா தொற்றிலும் குறையாத பொருளாதாரம் - பொருளாதார உச்சத்தில் சீன முதலீடுகள்
x
நடப்பு ஆண்டின் இரண்டாம் காலாண்டில் சீனாவின் உபரி வருவாய் 110 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்து உள்ளதாக அன்னிய செலவாணி வாரியம் தெரிவித்துள்ளது. இதே நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் உபரி வருவாய் 76 புள்ளி 5 பில்லியன் டாலராக இருந்த நிலையில் அது தற்போது அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், சீனாவின் மூலதன மற்றும் நிதிப் பற்றாக்குறை 36 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளதாக அன்னிய செலவானி வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாத இறுதியின் படி சீனாவின் வெளிநாட்டு முதலீடுகள் 2 புள்ளி 2 டிரில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 3 புள்ளி 6 சதவீதம் அதிகம். கொரோனா தொற்றினால் உலகமே பொருளாதார சிக்கலில் சிக்கி உள்ள நிலையில் சீனாவின் பொருளாதாரம் உச்சமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.   

Next Story

மேலும் செய்திகள்