அதிபர் பதவியில் தொடர்வதில் பிரச்சினை இருக்காது - அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதி
பதிவு : செப்டம்பர் 24, 2020, 04:35 PM
நவம்பர் 3ஆம் தேதி நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தால், அமைதியான முறையில், பதவி விலக டிரம்ப் உறுதியளிக்க மறுத்துள்ளார்.
நவம்பர் 3ஆம் தேதி நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தால், அமைதியான முறையில், பதவி விலக டிரம்ப் உறுதியளிக்க மறுத்துள்ளார். கருத்து  கணிப்புகளில் மிகவும் பின் தங்கியுள்ள டிரம்ப், தபால் வாக்குகளில் எதிர் கட்சியினரான ஜனநாயக கட்சியினர் பெரிய அளவில் முறைகேடுகள் செய்வார்கள் என்று தொடர்ந்து கூறி வருகிறார். கொரொனா பாதிப்பினால், இந்த முறை தபால் வாக்குகள் எண்ணிக்கை மிக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பத்திரிக்கையாளார்கள் சந்திப்பில் பேசிய டிரம்ப், தபால் வாக்குகளை செல்லாதவை என்று வகைப்படுத்தி, நிராகரிக்க வாய்ப்புகள்ளது என்பதால், தான் பதவியில் தொடர்வதில் பிரச்சினையிருக்காது என்று கூறினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.