அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் - டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடனும் சூறாவளி பிரசாரம்

அமெரிக்கா அதிபரான பிறகு 'எச்1பி' விசா குறித்த இந்தியர்களின் கவலை நீங்கும் என்று, ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.
அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் - டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடனும் சூறாவளி பிரசாரம்
x
அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் தேர்தலுக்காக குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய அதிபர் டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடனும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்திய வம்சாவளியினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இணையவழி நிதி திரட்டும் நிகழ்ச்சியில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் கலந்து கொண்டு பேசினார். அப்போது இந்திய வம்சாவளியினர், தங்களின் கடின உழைப்பாலும், தொழில் முயற்சிகளாலும் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்கு அளித்துள்ளதாக, ஜோ பைடன் புகழாரம் சூட்டினார். நடக்க இருக்கும் தேர்தலில், தான் வெற்றி பெற்று பதவிக்கு வந்தால், 'எச்1பி' விசா மற்றும் சட்டபூர்வ குடியேற்றம் குறித்த இந்தியர்களின் கவலைகள் போக்கப்படும் என, உறுதியளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்