சீனாவில் உய்குர் மக்களால் தயாரிக்கப்படும் பொருட்கள் இறக்குமதிக்கு தடை - அமெரிக்க நாடாளுமன்ற கீழ் சபையில் மசோதா நிறைவேற்றம்
பதிவு : செப்டம்பர் 23, 2020, 04:31 PM
மாற்றம் : செப்டம்பர் 23, 2020, 07:47 PM
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் பெருட்களை,இறக்குமதி செய்வதை தடை செய்யும் மசோதாவை அமெரிக்க நாடாளுமன்ற கீழ் சபை நிறைவேற்றியுள்ளது.
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் பெருவாரியாக வசிக்கும் உய்குர் இன மக்களை சீன அரசு கடும் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கி, அடிமைகளைப் போல நடத்தி, அங்கு உள்ள சீன தொழிற்சாலைகளில் கட்டாயபடுத்தி பணியாற்ற வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதை தடுக்கும் நோக்கத்தில் இந்த  மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவிற்கு ஆதரவாக 406 வாக்குகளும், எதிராக 3 வாக்குகளும் பதிவாகியுள்ளன. கட்சி வேறுபாடின்றி, இந்த மசோதாவிற்கு பெருவாரியான ஆதரவு ஏற்பட்டுள்ளது குறிபிடத்தக்கது. அந்த மாகாணத்தில் இப்படி கொத்தடிமை முறையில் 
தயாரிக்கப்படும் பண்டங்கள் அமெரிக்காவிற்கு பெரிய அளவில் வந்து சேர்வது மிகவும் வருத்தத்துக்குரியது என்று கீழ் சபையின் சபாநாயகர் நேன்சி பெலோசி, வாக்கெடுப்பிற்கு முன்பு கூறியிருந்தார். சீன அரசுக்கு நாம் ஒரு தெளிவான செய்தியை இதன் மூலம் அனுப்ப வேண்டும், இந்த மனித உரிமை மீறல்களை சீனா உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். 

அமெரிக்க தேர்தலில் ஆதிக்கம் செலுத்த முயற்சி - சீனாவிலிருந்து இயங்கிய 150 போலி கணக்குகள் நீக்கம்

அமெரிக்க தேர்தலில் ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்யும் விதமாக சீனாவிலிருந்து இயங்கிய 150 போலி கணக்குகளை நீக்கியதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை ஆதரிக்கும் விதமாகவும், எதிர்க்கும் விதமாகவும் இந்த கணக்குகளில் தகவல்கள் பகிரப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதே பிரச்சினையில் 6 இன்ஸ்டாகிராம் பக்கங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நவம்பரில் நடைபெற இருக்கும் அமெரிக்க தேர்தலில் ஆதிக்கம் செலுத்த சீனா மேற்கொண்ட நடவடிக்கை முதல்முறையாக வெளிப்படையாக தெரியவந்து இருக்கிறது. 

குடியரசு கட்சியை சேர்ந்த சிண்டி மெக்கைன்  ஜோ பிடனுக்கு ஆதரவு

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடனுக்கு, முன்னாள்அதிபர் ஒபாமாவுடன், போட்டியிட்டு தோல்வியடைந்த ஜான் மெக்கைனின் மனைவி சிண்டி மெக்கைன் ஆதரவு தெரிவித்துள்ளார். 

இது குறித்து சிண்டி மெக்கைன் தமது டிவிட்டர் பதிவில், தாங்கள் குடியரசுக் கட்சியை சேர்ந்தவர்கள் என்றும், ஆனால், நாட்டிற்கு உரிய கொள்கைகளை முன்னெடுக்கும் ஒரே வேட்பாளார் ஜோ பிடன் தான் என புகழாரம் சூட்டியுள்ளார். கட்சி வேறுபாடுகளை மீறி, ஜோ பிடனும், ஜான் மெக்கைனும் குடும்ப அளவில் நண்பர்களாக இருந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார். சிண்டி மெக்கைனின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த ஜோ பிடன், இது தனக்கு கிடைத்த பெருமை என்றார். அரிசோனா மாநிலத்தில் இருந்து 30 ஆண்டுகளாக அமெரிக்க செனட் உறுப்பினராக தெர்ந்தெடுக்கப் பட்ட ஜான் மெக்கைனின் மனைவி மற்றும் ஆதரவாளர்கள், ஜோ பிடனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், இந்த மாநிலத்தில் ஜோ பிடனுக்கு ஆதரவு அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. சென்ற தேர்தலில் இந்த மாநிலத்தில் டிரம்ப் வெற்றி பெற்றிருந்தார். 


ரஷ்ய தலைவர் நவால்னி உடல்நிலையில் முன்னேற்றம் - பெர்லின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

ரஷ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கடந்த மாத இறுதியில் பெர்லின் மருத்துவமனையில் கோமா நிலையில் அனுமதிக்கப்பட்ட அவர் 32 நாட்களுக்கு பின்னர் சகஜ நிலைக்கு திரும்பி தன் குடும்பத்தினருடன் இனைந்துள்ளார். நரம்பு மண்டலத்தை தாக்கும் ரசாயன மருந்தால் நவால்னியை கொல்ல முயற்சி செய்யப்பட்டுள்ளதாக ஜெர்மனி அரசு சர்ச்சை கருத்து தெரிவித்திருந்த நிலையில் அவர் சகஜ நிலைக்கு திரும்பி இருப்பது குறிப்பிடத்தக்கது. இது அவரது ஆதரவாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.   தொடர்புடைய செய்திகள்

"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்" - நடிகை ராஷ்மிகா

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.

588 views

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

மதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

91 views

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்துக்கு எதிர்ப்பு

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர்.

11 views

தேவாலயத்தில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூர கொலை - பிரான்சில் அதிகரிக்கும் கொலையால் மக்கள் அச்சம்

பிரான்சில் உள்ள தேவாலயம் ஒன்றில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.

0 views

பிற செய்திகள்

தேவாலயத்தில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூர கொலை - பிரான்சில் அதிகரிக்கும் கொலையால் மக்கள் அச்சம்

பிரான்சில் உள்ள தேவாலயம் ஒன்றில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.

0 views

பிரான்சில் அதிகரிக்கும் கொலையால் மக்கள் அச்சம் - தேவாலயத்தில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூர கொலை

பிரான்சில் உள்ள தேவாலயம் ஒன்றில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.

3205 views

அமெரிக்க அதிபர் தேர்தல் - வாக்குப் பெட்டி மற்றும் படிவங்களில் இடம் பிடித்துள்ளது தமிழ்

நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பெட்டி மற்றும் படிவங்களில் தமிழ் இடம் பிடித்துள்ளது.

22 views

அதிபர் தேர்தலில் ஜோ பிடனுக்கு வாக்களித்தால் மகிழ்ச்சியான நேரங்களை இழக்க வேண்டிய நிலை உருவாகும் - அதிபர் டிரம்ப்

ஜோ பிடனுக்கு வாக்களித்தால் அமெரிக்கர்கள் நன்றி அறிவிப்பு கொண்டாட்டங்கள் உள்பட அனைத்து நல்ல நிகழ்வுகளையும் இழக்க நேரிடும் என அதிபர் டிரம்ப் வாக்காளர்களை எச்சரித்துள்ளார்.

8 views

இந்தியாவின் தாக்குதலுக்கு பயந்து அபிநந்தன் விடுதலை - பாகிஸ்தான் எதிர்க்கட்சி எம்.பி.

அபிநந்தனை விடுதலை செய்திருக்காவிட்டால் அன்று இரவு 9 மணிக்கு இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியிருக்கும் என அந்நாட்டு நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சி எம்.பி. தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

21 views

இலங்கை உடனான அரசு ரீதியிலான உறவில், இரட்டை வேடம் - அமெரிக்கா மீது குற்றஞ்சாட்டி சீனா டிவிட்டர் பதிவு

இலங்கையுடனான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் மும்முரமாக உள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.