கொரோனா தொற்று சிகிச்சை மருந்து - ஜப்பான் நிறுவன மாத்திரை பயனளிக்கிறது

ஜப்பானில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் பிஜிபில்ம் நிறுவனத்தின் அவிகான் மாத்திரைகள் பயனளிப்பதாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று சிகிச்சை மருந்து - ஜப்பான் நிறுவன மாத்திரை பயனளிக்கிறது
x
ஜப்பானில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் பிஜிபில்ம் நிறுவனத்தின் அவிகான் மாத்திரைகள் பயனளிப்பதாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 3-ம் கட்ட பரிசோதனையில் இருக்கும் இம்மாத்திரைகளை எடுத்துக்கொண்ட நோயாளிகள் விரைவாக குணம் அடைந்து உள்ளனர் என்றும் அவர்களுக்கு பெரிய அளவில் பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்றும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆய்வினை மேற்கொள்ளும் அந்நிறுவனம், ஜப்பான் மருந்து கட்டுப்பாட்டு வாரிய அனுமதியை பெறுவதற்கான பணிகளையும் செய்துவருவதாக தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்