இலங்கை கடற்பரப்பில் எல்லை மீறும் இந்திய மீனவர்கள் - இலங்கை அமைச்சர் புகார்

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் எல்லை மீறல்கள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம்சாட்டி உள்ளார்.
இலங்கை கடற்பரப்பில் எல்லை மீறும் இந்திய மீனவர்கள் - இலங்கை அமைச்சர் புகார்
x
இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் எல்லை மீறல்கள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம்சாட்டி உள்ளார். நாடாளுமன்றத்தில் பேசிய அவர், வடமாகாண கடற்பரப்பில் சட்ட விரோத மீன்பிடி செயற்பாடுகளுக்கு விரைவில் தீர்வு எட்டப்படும் என்றார். இதனிடையே, தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் நிர்மலநாதன், இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் கடந்த அரசின் காலத்தில் ஓரளவு நிறுத்தப்பட்டு இருந்ததாகவும், தற்போது அவை அதிகரித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். அதற்கு, பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்