அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் தாமதமாக வாய்ப்பு

நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகள் வெளியாக தாமதம் ஏற்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் தாமதமாக வாய்ப்பு
x
நவம்பர் 3-ந் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். கொரோனா அச்சத்தின் விளைவாக அமெரிக்க அதிபர் தேர்தலில், அளவுக்கதிகமான தபால் வாக்குகள் பதிவாகும் என்று கருதப்படுகிறது. சுமார் 8 கோடி தபால் வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் பொதுவாக தபால் வாக்குகளில் வாக்காளர்கள் இடும் கையெழுத்தும், வாக்காளர் பதிவு அட்டையில் உள்ள கையெழுத்தும் ஒப்பிட்டு சரிபார்த்த பிறகுதான் தபால் வாக்குகள் எண்ணப்படும்.இது மட்டுமின்றி வாக்குகளை எண்ணும் முறையும் மாகாணங்களுக்கு இடையே மாறுபடுகிறது. உதாரணமாக புளோரிடா மாகாணத்தில் தேர்தல் நாளுக்கு முன்பே தபால் வாக்குகள் சரி பார்க்கப்படும். கலிபோர்னியாவில் தேர்தல் முடிந்து பல நாட்களுக்குப் பிறகு பெறப்படும் தபால் வாக்குகள் கூட கணக்கில் கொள்ளப்படும். வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் நிகழ்ந்தால் அவற்றை எதிர்த்து வழக்குத் தொடுக்கும் முறையும் அமெரிக்காவில் உள்ளது. இது போன்ற காரணங்களால் அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகள் தாமதமாகவே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த 2000-ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், தேர்தல் முடிந்து 36 நாட்களுக்குப் பிறகே முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்