டிக்-டாக் செயலி ஒப்பந்தத்துக்கு அதிபர் டிரம்ப் திடீர் அனுமதி

டிக்-டாக் செயலியுடன் ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவு அளித்து உள்ளார்.
டிக்-டாக் செயலி ஒப்பந்தத்துக்கு அதிபர் டிரம்ப் திடீர் அனுமதி
x
டிக்-டாக் செயலியுடன் ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  ஆதரவு அளித்து உள்ளார்.  இன்று முதல் அமெரிக்காவில் டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், டிக்-டாக் செயலி மீதான தடையை ஒருவாரத்துக்கு தள்ளி வைப்பதாக வர்த்தக துறை அறிவித்துள்ளது. ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனத்துடன் டிக்-டாக் செயலி, செய்து கொண்ட ஒப்பந்தத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் தடை தள்ளி வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்கு, அதிபர் டிரம்ப் ஆதரவு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  


Next Story

மேலும் செய்திகள்