இஸ்ரேல்-அமீரகம்-பஹ்ரைன் இடையே அமைதி ஒப்பந்தம் - அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் கையெழுத்து

இஸ்ரேல் - ஐக்கிய அரபு அமீரகம் - பஹ்ரைன் நாடுகளுக்கு இடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.
இஸ்ரேல்-அமீரகம்-பஹ்ரைன் இடையே அமைதி ஒப்பந்தம் - அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் கையெழுத்து
x
வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  அமைதி ஒப்பந்தத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு,  ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயாத்,  பஹ்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லாடிப் அல் சாயனி ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் மூலம், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் ராணுவ, பொருளாதார ரீதியான ஒப்பந்தங்களை இனி இஸ்ரேல் மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பாலஸ்தீனம், ஈரான் உள்ளிட்ட நாடுகள்  இந்த ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்துள்ளன. இஸ்லாமிய மக்களுக்கு அந்த நாடுகள் துரோகம் செய்துவிட்டதாகவும் அவை குற்றம் சாட்டியுள்ளன.


இஸ்ரேல் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு - பாலஸ்தீனம், இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்

இதனிடையே, அமைதி ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்ரேல் மீது  பாலஸ்தீனம், ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆஷ்தோட் நகரில் 2  ராக்கெட்டுகள் வீசப்பட்டதில், 2 பேர் காயமடைந்தனர். மேலும் அங்குள்ள கடைகளின் கண்ணாடிகள் உடைந்து, கட்டடங்கள் சேதம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்