பெண்களின் நிலை குறித்த ஐ.நா. ஆணைய உறுப்பினர் - சீனாவை வீழ்த்தி இந்தியா வெற்றி

பெண்களின் நிலை குறித்த ஐ.நா. ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
பெண்களின் நிலை குறித்த ஐ.நா. ஆணைய உறுப்பினர் - சீனாவை வீழ்த்தி இந்தியா வெற்றி
x
பெண்களின் நிலை குறித்த ஐ.நா. ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டு உள்ளது. நான்கு ஆண்டுகள் இந்த பதவியில் இந்தியா நீடிக்கும் என ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி தெரிவித்துள்ளார். எல்லா முயற்சிகளிலும் பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகாரம் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கான இந்தியாவின்  உறுதிப்பாட்டிற்கான ஒரு வலுவான ஒப்புதல் இது எனவும், இந்த வெற்றிக்கு உதவிய அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் இந்தியா சார்பில் நன்றி தெரிவித்து கொள்வதாகவும், தமது பதிவில் டி.எஸ்.திருமூர்த்தி குறிப்பிட்டுள்ளார். பெய்ஜிங் உலக பெண்கள் மாநாடு நடைபெற்ற 25-வது ஆண்டு இந்தாண்டு கடைபிடிக்கப்படும் நிலையில், சீனாவை வீழ்த்தி இந்த அமைப்பின் உறுப்பினராக இந்தியா வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  சீனா, இந்தியா, ஆப்கன் ஆகிய நாடுகள் போட்டியிட்ட நிலையில், இந்தியா வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்