அரிசோனாவில் டிரம்ப் பிரசாரம் - லத்தீன் மக்களை மிகவும் பிடிக்கும் என பேச்சு

அமெரிக்க அதிபர் தேர்தலை ஒட்டி அரிசோனா மாகாணத்தில் உள்ள பீனிக்ஸில் நடைபெற்ற வட்டமேஜை பிரச்சாரத்தில் பங்கேற்று ஆதரவு திரட்டிய அதிபர் டிரம்ப், தனக்கு ஹிஸ்பானிக் மற்றும் லத்தீன் மக்களை அதிகமாக பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.
அரிசோனாவில் டிரம்ப் பிரசாரம் - லத்தீன் மக்களை மிகவும் பிடிக்கும் என பேச்சு
x
அமெரிக்க அதிபர் தேர்தலை ஒட்டி அரிசோனா மாகாணத்தில் உள்ள பீனிக்ஸில் நடைபெற்ற வட்டமேஜை பிரச்சாரத்தில் பங்கேற்று ஆதரவு திரட்டிய அதிபர் டிரம்ப், தனக்கு ஹிஸ்பானிக் மற்றும் லத்தீன் மக்களை அதிகமாக பிடிக்கும் என தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சார பேரணி, பொதுக் கூட்டங்களில் பங்கேற்பதை விட, இதைப் போன்று வட்ட மேசைகளில் வணிக நிறுவனங்களின் மேலாளர்களுடன் பேசுவது தனக்கு பிடிக்கும் என தெரிவித்துள்ளார். அமெரிக்க மக்கள் தொகையில் 6-ல் ஒரு பங்காக உள்ள இந்த மக்கள் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது. சன்பெல்ட் மாகாணங்கள் என்று அழைக்கப்படும் அரிசோனா, புளோரிடா, வடக்கு கரோலினா மற்றும் ஜார்ஜியாவில் கூட இந்த முறை ஜனநாயக கட்சிக்கு அதிக செல்வாக்கு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் டிரம்ப் இவ்வாறு பேசி உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்