10 ஆயிரம் இந்தியர்களை வேவு பார்க்கும் சீன நிறுவனம் - பட்டியலில் பிரதமர் மோடி, ராம்நாத் கோவிந்த்
பதிவு : செப்டம்பர் 14, 2020, 05:50 PM
10 ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியர்களின் தகவல்களை திரட்டி, அவர்களை சீன நிறுவனம் வேவு பார்ப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.
10 ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியர்களின் தகவல்களை திரட்டி, அவர்களை சீன நிறுவனம் வேவு பார்ப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, இந்திய ராணுவ தளபதிகள், அரசு அதிகாரிகள் என இப்பட்டியல் நீண்டு செல்கிறது.  

சீனாவின் ஷென்செனில் இருக்கும் ஜென்ஹுவா டேட்டா நிறுவனம், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, சோனியா காந்தி உள்பட10 ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியர்களின் தகவல்களை திரட்டி, வேவு பார்த்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

 ஜென்ஹுவா நிறுவனம் சீன அரசுக்கு, சீன கம்யூனிச கட்சிக்கும் நெருங்கிய தொடர்புடையது. சீனாவின் உளவுத்துறை, ராணுவம் மற்றும் பாதுகாப்பு துறையுடன் பணியாற்றி வருகிறது. இந்நிறுவனம் இந்திய அரசியல் தலைவர்கள் தரவுகள், இந்திய கேபினட் அமைச்சர்கள், ராணுவ தளபதிகள், நீதிபதிகள், முக்கிய அரசு அதிகாரிகள், நிறுவனங்களை இலக்காக கொண்டு ரகசிய  தரவுகளை சேகரித்துள்ளது. எளிதாக அணுக முடியாத வகையில் டேட்டா தரவுகளை பாதுகாக்கும்  அந்நிறுவனம், போர் மற்றும் சீன நாட்டிற்கு பெரும் புத்துணர்ச்சிதிட்டங்களுக்காக தரவுகளை பயன்படுத்துகிறோம் என தெரிவித்துள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.