டோக்கியோ ஒலிம்பிக் திட்டமிட்டபடி நடத்தப்பட வேண்டும் - ஜப்பான் ஒலிம்பிக் அமைச்சர் தகவல்

டோக்கியோ ஒலிம்பிக் திட்டமிட்டப்படி நடத்தப்பட வேண்டும் என ஜப்பானின் ஒலிம்பிக் அமைச்சர் SEIKO HASHIMOTO தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் திட்டமிட்டபடி நடத்தப்பட வேண்டும் - ஜப்பான் ஒலிம்பிக் அமைச்சர் தகவல்
x
டோக்கியோ ஒலிம்பிக் திட்டமிட்டப்படி நடத்தப்பட வேண்டும் என ஜப்பானின் ஒலிம்பிக் அமைச்சர் SEIKO HASHIMOTO தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தாண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. கொரோனாவின் தாக்கத்தில் இருந்து உலகம் மீளாத சூழலில் , வீரர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் போட்டிகளை நடத்த இயலுமா என கேள்வி எழுந்துள்ளது. சுமார் 11 ஆயிரம் வீரர்கள் ஒலிம்பிக்கில் கலந்து கொள்வார்கள் என்பதால் , எவ்வித பாதிப்பும் இன்றி நடத்துவது சவாலாக இருக்க கூடும் ஆனால் கடும் கட்டுப்பாடுகளுடன் , போட்டிகளை நடத்துவதில் தாங்கள் உறுதியுடன் இருப்பதாக ஜப்பானின் ஒலிம்பிக் அமைச்சர் SEIKO HASHIMOTO கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்