இஸ்ரேலில் மீண்டும் பரவும் கொரோனா தொற்று - நாடு முழுவதும் 3 வார கால ஊரடங்கு அமல்
இஸ்ரேலில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் அந்நாடு முழுவதும் 3 வார கால ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் அந்நாடு முழுவதும் 3 வார கால ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2-வது முறையாக பரவி வரும் கொரோனா தொற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். கல்வி கூடங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை மூடப்படும் என்றும் சிறு கடைகள், மருந்தகங்கள் திறந்திருக்கும் என்றும் அவர் கூறினார். அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களுடன் செயல்படும் என்றும் இஸ்ரேல் பிரதமர் தெரிவித்தார்
Next Story

