ஜோ பிடன், போதை மருந்து பயன்படுத்துபவர் - அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு
பதிவு : செப்டம்பர் 13, 2020, 09:36 AM
ஜனநாயக கட்சி வேட்பாளர், ஜோ பிடன், போதை மருந்து பயன்படுத்துபவர் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஜனநாயக கட்சி வேட்பாளர், ஜோ பிடன், போதை மருந்து பயன்படுத்துபவர் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், குற்றஞ்சாட்டியுள்ளார். நியூயார்க்கில், பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அதிபர் டிரம்ப், நேரடி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஜோ பிடனின் செய்கைகள், போதை பொருளை பயன்படுத்தியிருப்பரோ என்ற சந்தேகத்தை எழுப்புவதாக கூறியுள்ளார். கடந்த வாரம், இதே போல் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில், விவாத நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பு ஜோ பிடன் போதை மருந்து பயன்படுத்தினாரா என பரிசோதனை செய்ய வேண்டும் என, டிரம்ப், கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.