"கொரோனா வைரஸ் தீவிரத்தை ஆரம்பத்தில் குறைத்து மதிப்பிட்டேன்"-அதிபர் டிரம்ப் பேட்டியால் உருவானது சர்ச்சை

கொரோனா வைரஸின் தீவிரத்தை ஆரம்பத்தில் குறைத்து மதிப்பிட்டதாக அதிபர் டொனாலட் டிரம்ப் பேட்டி ஒன்றில் கூறியுள்ளது, தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தீவிரத்தை ஆரம்பத்தில் குறைத்து மதிப்பிட்டேன்-அதிபர் டிரம்ப் பேட்டியால் உருவானது சர்ச்சை
x
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், ஒரு எழுத்தாளருக்கு டிரம்ப் அளித்த பேட்டியின் போது, கொரோனா நோய் எத்தனை ஆபத்தானது மற்றும் எளிதில் பரவக் கூடிய தொற்று நோய் என்பதை நன்கு உணர்ந்திருப்பதாக கூறியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதை பெரிதுபடுத்தினால் பொது மக்கள் பீதிக்குள்ளாவர்கள் என்பதால் இதை பெரிதுப்படுத்தாமல், அடக்கி வாசித்தாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள, ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன், டிரம்ப்பை கடுமையாக விமர்த்துள்ளார். இது ஆபத்தனானது என்று நன்கு தெரிந்தும், டிரம்ப் இதை பற்றி வெளிப்படையாக பேசாமல், அமெரிக்க மக்களிடம் பொய் பேசியிருக்கிறார் என்று சாடியுள்ளார். கொரோனா பரவலாகி வரும் நிலையில், இந்த விவகாரம் டிரம்ப்பின் செல்வாக்கை மேலும் சரிய வைக்கும் என்று கருதப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்