ரஷ்யாவில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்த கொரோனா தடுப்பூ​சி - மாஸ்கோ மாநகர மேயர் செர்ஜி சோபியானின் தகவல்

ரஷ்யாவின் முதல் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் V, பொது மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
ரஷ்யாவில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்த கொரோனா தடுப்பூ​சி - மாஸ்கோ மாநகர மேயர் செர்ஜி சோபியானின் தகவல்
x
உலகம் முழுவதையும் முடக்கிப் போட்டு உள்ள கொரோனா பரவலை தடுக்க இத்தாலி, சீனா, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசி கண்டுபிடித்துள்ளன. இவை பல்வேறு கட்ட நிலைகளில் உள்ளன. இந்நிலையில்கடந்த ஆகஸ்ம் 11 ஆம் தேதி ரஷ்யா பதிவு செய்த ஸ்புட்னிக் V, தடுப்பூசி மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. ஆசிய பிராந்தியத்தில் உள்ள அண்டை நாடுகளுக்கு இந்த தடுப்பூசியை வரும் காலத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரஷ்ய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொற்று நோய் மற்றும் நுண்ணுயிரியல் கமலேயா தேசிய ஆராய்ச்சி மையம் தயாரித்துள்ள இந்த தடுப்பூசி அனைத்து சோதனைகளுக்கு பின்னர் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக, ரஷ்ய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அடுத்த சில மாதங்களில் இந்த தடுப்பூசி மாஸ்கோ நகரத்தில் உள்ள அனைவருக்கும் போடப்படும் என மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்