நெருங்கி வரும் அமெரிக்க அதிபர் தேர்தல் - கூலாக கோல்ப் விளையாடிய டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போதைய அதிபர் டிரம்ப் கோல்ப் விளையாடி நேரத்தை செலவிட்டார்.
நெருங்கி வரும் அமெரிக்க அதிபர் தேர்தல் - கூலாக கோல்ப் விளையாடிய டிரம்ப்
x
அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போதைய அதிபர் டிரம்ப் கோல்ப் விளையாடி நேரத்தை செலவிட்டார்.அதே நேரம் அவரை எதிர்த்து களம் இறங்கி உள்ள ஜனநாயக கட்சியின் ஜோபிடன் தேவாலயத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டார். அமெரிக்காவிற்கு புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நவம்பர் மூன்றாம் தேதி நடைபெற உள்ளது. தற்போதைய அதிபர் டிரம்ப் குடியரசு கட்சியின் சார்பில் மீண்டும் களம் இறங்கி உள்ள நிலையில், அவரை எதிர்த்து தேர்தல் களத்தில் குதித்துள்ளார் ஜனநாயக கட்சியின் ஜோபிடன். இருவரும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார்கள். பிற நாடுகளை போலவே அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து, தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில், விர்ஜீனியா சென்ற அதிபர் டிரம்ப் அங்கு கோல்ப் விளையாடி நேரத்தை செலவிட்டார். கோல்ப் மைதானத்தில் நான்கு சக்கர வாகனத்தை இயக்கியும் மகிழ்ந்தார். அதே வேளையில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோபிடன், கிரீன் பில்லி பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். தேவாலயத்தில் இருந்து பாதிரியார்களுடன் அவர் வெளியோறும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் அதிபர் டிரம்பிற்கு 40 சதவீத வாக்குகளும், ஜோபிடனுக்கு 47 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதனிடையே, இந்த ஆண்டு வாக்குப்பதிவு மந்தமாக இருக்கும் என்றும், கொரோனா அச்சம் காரணமாக வாக்குச்சாவடிக்கு சென்று நேரில் வாக்களிப்போர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கும் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தபால் வாக்குகளே அதிகம் பதிவாகும் என்பதால் வாக்கு எண்ணும் பணி தாமதமாகி, தேர்வு முடிவுகளும் தாமதமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்