(02.09.2020) உலக செய்திகள்

(02.09.2020) உலக செய்திகள்
(02.09.2020) உலக செய்திகள்
x
8 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு - ஆர்வமுடன் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் 

கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவின் உகான் நகரில் சுமார் 8 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சுமார் 2 ஆயிரத்து 842 பள்ளிள் மற்றும் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டன. முதல் நாளிலேயே கிட்டதட்ட 14 லட்சம் மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர்கள் பள்ளிக்கு திரும்பியதால் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.


நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு  - மாணவர்கள் முக கவசம் அணியாததால் அதிர்ச்சி 

இங்கிலாந்து நாட்டில் நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன, அப்போது கல்வியாளர்கள் , வல்லுநர்கள் இதே நிலை தொடர்ந்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து பள்ளிகள் திறப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என அந்நாட்டு அதிபர் போரிஸ் ஜான்ஸன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இங்கிலாந்தில் பெரும்பாலான பள்ளிகள் திறப்பட்டுள்ளது. பள்ளிகளில் மாணவர்கள் முக கவசம் இன்றி , சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழா- ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று வழிபாடு

இலங்கை யாழ்ப்பாணம், தொண்டைமானாறு செல்வ சந்நிதி முருகன் ஆலய தேர் திருவிழா,கோலாகலமாக நடைபெற்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், அன்னதானக் கந்தன் என பக்தர்களால் போற்றி சிறப்பிக்கப்படுவதுமான செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் மகோற்சவம், கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது. அதில் முக்கிய விழாவான தேர்த் திருவிழா, விமர்சையாக நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு, முருகப் பெருமானை பக்திப் பூர்வமாகத் தரிசித்தனர். இதனிடையே கொரோனாவால், அங்கப்பிரதட்சணம், கற்பூர சட்டி எடுத்தல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களுக்கு தடை மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்