பாகிஸ்தான் அணியுடனான 3வது டெஸ்ட் போட்டி- தொடரை வென்றது இங்கிலாந்து

பாகிஸ்தான் அணியுடனான 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தததை அடுத்து, ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரை இங்கிலாந்து அணி வென்றது.
பாகிஸ்தான் அணியுடனான 3வது டெஸ்ட் போட்டி- தொடரை வென்றது இங்கிலாந்து
x
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, இங்கிலாந்துடன் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது போட்டியில் மழை குறுக்கிட்டதால் அப்போட்டி டிராவில் முடிந்தது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மூன்றாவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில், இங்கிலாந்து 583 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 273 ரன் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 187 ரன் எடுத்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டது. இதையடுத்து இந்தப் போட்டியும் டிராவில் முடிந்தததை அடுத்து, ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை வென்றது.

Next Story

மேலும் செய்திகள்