இஸ்ரேல் - அகழ்வாராய்ச்சியில் தங்க புதையல் கண்டெடுப்பு

இஸ்ரேலில், சுமார் ஆயிரத்து 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த தங்க நாணயங்களை, அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
இஸ்ரேல் - அகழ்வாராய்ச்சியில் தங்க புதையல் கண்டெடுப்பு
x
இஸ்ரேலில், சுமார் ஆயிரத்து 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த தங்க நாணயங்களை, அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். மத்திய இஸ்ரேலில், கடந்த சில நாட்களாக அகழாய்வு பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று பழமையான தங்க நாணயங்கள் கிடைத்தன. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள், ஆயிரத்து 100 ஆண்டுகள் முன்பு, யாரோ ஒருவர் தங்க நாணயங்களை புதைத்து வைத்திருக்கலாம் என கூறியுள்ளனர். பின்னர் அதனை எடுத்து கொள்ளலாம் என நினைத்து அது முடியாமல் போயிருக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த தங்க நாணயங்கள் வணிகத்திற்காக, கொண்டு வரப்பட்டதாக இருக்கலாம் என்பதும் அகழ்வாராய்ச்சியாளர்களின் கருத்தாகும். 

Next Story

மேலும் செய்திகள்